மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

ஹர்திக் பாண்டியா அவுட், ரோஹித் ஷர்மா இன்!

ஹர்திக் பாண்டியா அவுட், ரோஹித் ஷர்மா இன்!

ஜனவரி 24ஆம் தேதி நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படவில்லை. இந்தியா ஏ அணியில் நியூசிலாந்து அணியுடன் விளையாடிவந்த பாண்டியா, காயம் காரணமாக வெளியேறினார். அவருக்குப் பதிலாக விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.

பிசிசிஐ ஹர்திக் பாண்டியா பற்றி வெளியிட்ட அறிக்கையில், “எதிர்பார்த்ததை விட அவர் காயங்களில் இருந்து மிகவும் பொறுமையாகக் குணமாகிவருகிறார்” என்று குறிப்பிட்டிருந்தது. ஹர்திக் பாண்டியா கடைசியாக செப்டம்பர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இலங்கை, ஆஸ்திரேலியா தொடரில் ஓய்வு பெற்றிருந்த ரோஹித் ஷர்மா, சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முகமத் ஷமி மீண்டும் அணியில் இணைந்துள்ளார். நவ்தீப் சைனி, ஷர்துள் தாகூர் ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியில் ஒரு முத்திரையைப் பதித்துள்ளதால், அவர்களுடைய பெயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாய்ப்புக்கு புவனேஸ்வர் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் காயம் காரணமாகத் தேர்ச்சியடையாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

டி20 தொடருக்கான இந்தியா அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குலதீப் யாதவ், யுவேந்தர சஹால், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமத் ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துள் தாகூர்.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon