மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

வெற்றிமாறனின் ‘வாடிவாசலில்’ சூர்யா

வெற்றிமாறனின் ‘வாடிவாசலில்’ சூர்யா

நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்துவந்த ‘வாடிவாசல்’ திரைப்படத்தினைப் பற்றிய சந்தேகம் முடிவுக்கு வந்திருக்கிறது. சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்குவதாக வெளியாகியிருந்த தகவல்களை உறுதி செய்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தின் வெற்றிக்கு முன்பே, மக்களுக்கு சொல்லவேண்டிய கதைகளை எழுத்தின் மூலம் பதிவு செய்திருந்த எழுத்தாளார்களின் கதைகளை திரைப்படமாக மாற்றுவதில் தீராத ஆவல் கொண்டிருந்தார் இயக்குநர் வெற்றிமாறன். விசாரணை திரைப்படத்தின் அங்கீகாரம், அசுரன் படத்தின் மாபெரும் வெற்றி இவற்றைத் தொடர்ந்து, தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவரான சாகித்ய அகாடமி விருது வென்ற சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை திரைப்படமாக எடுக்கிறார் வெற்றிமாறன் என்று பேசப்பட்டது. இப்போது இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தனுஷின் மற்ற படங்கள் முடிந்தபிறகு, வட சென்னை 2 திரைப்படத்தின் வேலைகளைத் தொடங்கக் காத்திருக்கிறார் வெற்றிமாறன். இந்த இடைப்பட்ட நேரத்தில் வாடிவாசல் திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். வட சென்னை 2 ஷூட்டிங் முடிந்த பிறகு வாடிவாசல் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விகடன் நிறுவனம் நடத்திய விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோது இந்தத் தகவலை வெற்றிமாறன் உறுதிசெய்தார்.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon