மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

அரசு விடுமுறையும், டாஸ்மாக் கலெக்‌ஷனும்... :அப்டேட் குமாரு

அரசு விடுமுறையும், டாஸ்மாக் கலெக்‌ஷனும்... :அப்டேட் குமாரு

பொங்கலுக்கு ஆயிரம் ஓவா குடுக்குறாங்களாம் போய் வாங்கிட்டு வரலையான்னு கேட்டா, ரேஷன் கார்டும் ஆதார் கார்டும் கனெக்ட் ஆகியிருக்கு. ஆதார் கார்டோட என் பேங் அக்கவுண்ட் கனெக்ட் ஆகியிருக்கு. ஸ்ட்ரைட்டா இதுலயே போட்டுட்டா போய் வரிசைல நின்னு வாங்க வேண்டிய பிரச்சினை இல்ல பாரு அப்டின்றான். அரசு நியாயமா உனக்கு கொடுக்கவேண்டிய பணமா இருந்தாலும், உன்னை வெய்யில்ல நிக்க வெச்சு தாமதப்படுத்தி கஷ்டப்படுத்தி கொடுத்தா தான், அவங்களுக்கு கட்டுப்பட்டு நீ இருக்கன்னு அர்த்தம். அதான் இப்டி பண்றாய்ங்க அப்டின்னு நான் சொன்னேன். அட, அதை சொல்லலைண்ணே. “ஸ்ட்ரைட்டா பேங்க் அக்கவுண்ட்ல போட்டுட்டு, டாஸ்மாக் பேங்க் அக்கவுண்ட் நம்பரையும் கொடுத்துட்டு, டோர் டெலிவரிக்கு ஏற்பாடு பண்ணிட்டா டாஸ்மாக்ல போய் வரிசைல நிக்கவேண்டாம்லன்னு சொன்னேன்” அப்டின்னுட்டு ஓடிட்டான். நான் போய் அவன் பொண்டாட்டிகிட்ட போட்டுக்கொடுத்துட்டு வர்றேன். நீங்க அப்டேட்டை படிங்க. சண்டேன்றதால அம்புட்டு பேரும் வீடியோவா ஷேர் பண்ணி வெச்சிருக்கான். அப்டியே அதையும் பாத்துட்டு போயிருங்க.

ஜோக்கர்...

"தைரியம்"ன்னா என்ன தெரியுமா?!!

நம்மள பார்த்து நாய் குலைச்சிட்டே கிட்ட ஓடி வர்றப்ப "பயத்தை காட்டாம"கிராஸ் பண்ணி போறது...!!!

மாஸ்டர் பீஸ்

மீ - எவ்ளோதான் புரண்டு, புரண்டு படுத்தாலும் தூக்கம் வர மாட்றியே உனக்கு வெட்கமா இல்லை!!!

ஞாயிறு - வயிறு முட்ட இப்படி கறிச் சோற திண்ணுட்டு வந்து மூச்சு முட்ட வைக்கிறியே உனக்கு காவாளி தனமா இல்ல???

அர்ஜூன்

ஒருதலைகாதல்.

தென்படும் தூரத்தில்

நிலவிருந்து பயனென்ன

அந்த நிலவின் நினைவில்

தென்படாத தூரத்தில்

நான் வாழ்கிறேன்.

கடைநிலை ஊழியன்

டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக் - செய்தி

இன்னும் எத்தனை ஜி.பி முத்து , ரவுடி பேபி வர போறாங்களோ !!

பேஸ்புக் பிரபலம்

பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல - மத்திய அரசு

வெளிநாட்டில் தமிழரின் திருக்குறள் சொல்லி பிச்சை எடுக்கவேண்டியது ?

இந்தியாவில், தமிழரையும் தமிழர் பண்பாட்டையும் அவமதிக்கவேண்டியது..

என்ன பிறவியோ கருமம் புடிச்சவங்க. ஒரு நாட்டின் நல்ல தலைவன், நல்ல அரசன் இப்படி செய்வானா?

ச ப் பா ணி

பேசுவதிற் பயனில்லை:

அனுப வத்தாற்

பேரின்பம் எய்துவதே ஞானம்

-பாரதியார்

-லாக் ஆஃப்.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon