l
ஆண்டுதோறும் சமூக வலைதளமான ட்விட்டரில் நடிகர்கள் பற்றி அதிகம் ட்வீட் செய்யப்பட்டுள்ள பட்டியல் குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் ட்விட்டரில் தென்னிந்தியத் திரைப்பட நடிகர், நடிகைகள் பற்றி அதிகம் ட்வீட் செய்யப்பட்டுள்ள பட்டியலை ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில் முதல் இடத்தில் தமிழ் நடிகர் விஜய், பத்தாவது இடத்தில் அஜித்குமாரும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வரும் ரஜினிகாந்துக்கு ஏழாவது இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம் சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் ரசிகர்கள் முழு நேரமும் இயங்கி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
1. விஜய்
2. பவன் கல்யாண்
3. மகேஷ் பாபு
4. சூர்யா
5. ஜூனியர் என்.டி.ஆர்
6. அல்லு அர்ஜுன்
7. ரஜினிகாந்த்
8. ராம் சரண்
9. தனுஷ்
10. அஜித்குமார்
தென்னிந்திய நடிகைகள் பற்றி அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பட்டியலையும் ட்விட்டர் நிர்வாகம் பட்டியலிட்டுள்ளது.
1. கீர்த்தி சுரேஷ்
2. பூஜா ஹெக்டே
3. சமந்தா
4. கஜால் அகர்வால்
5. மாளவிகா மோகனன்
6. ப்ரீத் சிங்
7. சாய் பல்லவி
8. தமன்னா
9. அனுஷ்கா
10. அனுபமா
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
**-இராமானுஜம்**
�,