“என்னடா தம்பி? கையில ரஜினி முகத்த பச்ச குத்தி வெச்சிருக்க?”,“பரம ரசிகன் அண்ணே நானு. எங்க சூப்பர் ஸ்டாரு பாத்தீங்கள்ல? தன் காரை தானே டிரைவரு வெச்சிக்காம ஓட்டிட்டு போறாரு…அம்புட்டு எளிமை”..“ஆமாடா எம்புட்டு எளிம? உங்க சூப்பர் ஸ்டாரு 1.5 லட்ச ஓவா நானோ காரா ஓட்டிட்டு போறாரு? நாலே முக்கால் கோடி லாம்போர்கினி உருஸ் வண்டிய ஓட்டிட்டு போறாரு. டிரைவர வெச்சு வண்டி ஓட்டிட்டு போனா நண்பர் அமிதாப் மாதிரி ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிரப்போறோமேன்னு பயம்..வந்துட்டாங்க எளிமை நேர்மை பொறுமைன்னு…போவியா?”..“என்னண்ணே…அப்டிலாம் சொல்லாதீங்க, ஆடிட்டர் ஐயாவே சொல்லிட்டாரு அடுத்த சி.எம். சூப்பர் ஸ்டார் தான்னு..”…“எத..அதுக்கு அவரு மொத அரசியல்ல குதிக்கணும்டா..உங்க அண்ணன அரசியல்ல குதிக்க சொல்லு, பொறவு அவர் என்ன ஆகுறாருன்னு பார்க்கலாம். இப்புடி ஐயாவோட எளிமை பத்தின செய்தி எல்லாம் எங்கிட்ட தூக்கிட்டு வராத, வர்ட்டா”, என்றபடி கிளம்பினான் குமாரு.
**எதார்த்தமானவள்**
வாழ்க்கையை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் முன்..
ஒன்றை ஏற்றுக் கொள்ளுங்கள்..
“விளையாட்டிற்கும் விதிமுறைகள் உண்டு”
Hold my beer while I show the kids this magic trick. ???? pic.twitter.com/IDfjRzYBqA
— Hold My Beer (@holdmyale) July 21, 2020
**ஸ்நேக் பாபு**
முருகன்: டேய் வெண்ணைங்களா என்ன காப்பாத்திக்க எனக்கு தெரியும்.
நீங்க போய் உங்க இடஒதுக்கீட்ட காப்பாத்ற வழிய பாருங்கடா
**இதயவன்**
கோயில் விழாக்களை நடத்தலாம்; பக்தா்களுக்கு அனுமதியில்லை, தமிழக அரசு உத்தரவு
யாரும் இல்லாத கடையில யாருக்கு சாமி ஹார்லிக்ஸ் ஆத்தனும்?!!
**மயக்குநன்**
‘பொய்யை’ நிறுவனமயமாக்கி விட்டது மத்திய அரசு!- ராகுல்.
‘லை’சென்ஸ் வாங்கிட்டாங்கன்னு சொல்றீங்களா ஜீ..?!
**பிரபு ஜி**
அடேய் விஜய் டீவி, நீ போட்ட படத்தையே திரும்ப திரும்ப போடுறதை கூட மன்னிச்சுடுவேன்டா. ஆனால் அதுக்கு புதுப்படம் போடுற மாதிரி மணிக்கு முப்பது விளம்பரம் போடுற பார், அதை மட்டும் மன்னிக்கவே முடியாதுடா..
**செல்வபாரதி**
யானையை எளிதில் வரைந்து விடலாம். எறும்பை வரைவதே கடினம்.
சின்னச்சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் பெரிய வெற்றி கிடைக்கும்.
**ஜால்ரா காக்கா**
1973க்கு பின்னாடி தான் பெரியாரின் சிலை தமிழகத்தில் அதிகம் நிறுவப்பட்டது ~துப்பறியும் புலி மாரிதாஸ்
ஏய்யா அவரு இறந்தது 1973ல தான்யா.. ஒருத்தருக்கு சிலை அவங்க செத்த பின்னாடி தானயா வைப்பாங்க
It’s Saturyay???? pic.twitter.com/ySaW8xXJ8f
— Gannuprem (@Gannuuprem) July 19, 2020
**கோழியின் கிறுக்கல்**
நம்ம ஆளுங்க Maskஐ கழுவுவதே இல்லை என்பதை உணர்ந்து,
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து நனைத்து விட்டு போகிறது மழை!!
**-லாக் ஆஃப்**
�,”