அடுத்த வீட்டுக்கு மட்டும் தான் அறிக்கையா? அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

“ஓடுறான் பாரு..புடி புடி புடி..” என்றபடி மகனை விரட்டிக்கொண்டு ஓடிய அக்காவை நெட்டித்தள்ளிவிட்டு ஓடத்தொடங்கினான் குமார். பொடியனைக் கதறக் கதறப் பிடித்துக்கொண்டு வந்து அக்காவிடம் கொடுத்துவிட்டு விசாரணையை ஆரம்பித்தான். “ஏன்கா புள்ளைய ஓடி ஓடி துரத்துற? அப்புடி என்ன தான் செஞ்சான்?”..“அதை ஏன் கேக்குற தம்பி…நேத்து கடைக்கு போய் அஞ்சு ரூவா சோப்புக்கட்டி ஒண்ண வாங்கிட்டு வரச் சொன்னேன். செய்யல. காலையில சட்னி அரைக்க அஞ்சு ரூவா மிளகா வாங்கிட்டு வரச் சொன்னேன். செய்யல. இப்ப என்னடான்னா பக்கத்து வீட்டு மல்லிகா ஒரு மூட்டை அரிசி வாங்கியாரச் சொல்லியிருக்கா, சைக்கிளுல தூக்க முடியாம தூக்கிட்டு வந்து நிக்கிறான். மாட்டிக்கிட்டான், ..”

“அட போக்கா…உள்ளூருல பெரியார் செலைக்கு காவி பெயின்ட் அடிச்சப்ப வாய தொறக்கல, ஓபிசி ரிசர்வேஷன் பற்றி போகுது, வாய தொறக்கல, பெரியார் செலைக்கு செருப்பு போட வந்த ஆளைப் புடிச்சாங்க வாய தொறக்கல..ஆனா பக்கத்து மாநிலம் பாண்டிச்சேரியில எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு யாரோ போட்டாங்கன்னு அறிக்கை குடுத்துருக்காரு நம்ம சி.எம். எல்லாம் ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூபா குடுத்த கதை தான். நீ போ கா அந்த பக்கம். புள்ளைய திட்டாத. நாளைக்கே உன் புள்ள சி.எம். ஆக வாய்ப்பிருக்கு. போ போ”, என்று அக்காவை அனுப்பிவிட்டு குளிக்கப் போனான் குமார்.

நீ படிக்காத செல்லம். அப்புறம் பார்த்துக்கலாம்.???? எம்புட்டு க்யூட்டு ???????????? pic.twitter.com/eYYJ9MJy4w

— Sonia Arunkumar (@rajakumaari) July 24, 2020

**பிரபுஜி**

சாப்பிடும் பொழுது ஊமையாகவும்

சிறுதவறுகள் நடக்கும் பொழுது குருடாகவும்

சண்டையின் பொழுது செவிடாகவும் இருக்கப் பழகுவதே ஆகச்சிறந்த இல்லறம்!!

**ஆட்லின்**

கணக்கில் வராத பணம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் கணக்கில் வராத பிணம் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

**சித்ராதேவி**

ஆர்ப்பரிக்கும் கடல் நீயும் நானும் அருகருகில் வாய் விட்டு கேட்க தீரா வெட்கமெனக்கு..

நீ தந்தால் தாகம் தீரும். மறுதலித்தால் மரித்தலே சுகமாகும்.

எத்தனை நேரம்தான் அடக்கிட முடியும் ஆசையை.. வெட்கம் தடுத்திழுக்க தயங்கித் தயங்கி கேட்டே விடுகிறேன். வாங்கித் தாயேன் எனக்குமொரு கடலை பொட்டலம்

**கோழியின் கிறுக்கல்**

‘நேரம் போதவில்லை’ என்று புலம்பியவர்களை எல்லாம்,

‘நேரம் போகவில்லை’ என்று புலம்ப வைத்த பெருமை கொரானாவையே சாரும்!!

**ஜால்ரா காக்கா**

~சாமி பாஸ் என்ன காரணம் போட்டாலும் ரிஜெக்ட் ஆவது சாமி தோழர் சிஸ்ட்டம்~மெடிக்கல் எமெர்ஜனசி சுகர்க்கு வாக்கிங் போவனும்ன்னு போடு… போட்ட 10 நிமிஷத்துல பாஸ் வரலைன்னா என்ன என்னான்னு கேளு

**அ.ப.பெருமாள்**

ரஜினி, சரத்குமார் தவிர மற்றவர்கள் குரல் கொடுக்காதது ஏன்?- எல்.முருகன்.

கமல் சாரை வேணா கவிதை எழுத சொல்றோம். படிச்சி புரிஞ்சுக்குவீங்களா?

**மாஸ்டர் பீஸ்**

அன்பிற்கோ! வம்பிற்கோ! பெண்களை பின்தொடருபவன் மனுசன்,

பெண்களை பின்தொடர வைப்பவன் பெரிய மனுசன்!!!

**ஜோக்கர்**

“மணமக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிகள் கொரோனாவை போல பெருகட்டும்”என்பது,

“ஆகச்சிறந்த வாழ்த்தாய்” அமைந்தாலும் ஆச்சரியமில்லை.

**ச ப் பா ணி**

நான் முட்டாள் என்பதை தெரிந்து கொள்வதற்கு கொஞ்சம் அறிவு தேவைப்பட்டது.”

-ராஜா சந்திரசேகர்

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share