டீக்கடை. “ஏல சூமாரு..என்னல மூஞ்சியெல்லாம் சுணங்கிப் போயிருக்கு..என்னலா?”…“அட அத ஏங்கேக்கீங்க அண்ணாச்சி…ரெண்டு நாளா வீட்டுல பொம்பிளயாளு ஒரே அச்சனத்தி பண்ணிக்கிட்டு கெடக்கா. திருச்செந்தூரு முருயன் கோயிலுக்கு மொட்டை போடணும்னு கழுத வேண்டிக்கிட்டாளாம். இன்னிக்கே போணும், இப்பவே போணும். முருவன ஊரே தப்பாப் பேசுது, நம்ம போய் ஒரு எட்டு பாத்துட்டு, மொட்டையடிச்சிக்கிட்டு வந்துரலாம்ல, வாங்க அத்தான்னு அனத்திட்டு கெடக்கா”…“ஏல அடுத்து அவ சாமியாடுததுக்கு முன்னாடி கூட்டிக்கிட்டு போய்ட்டு வந்துருல சூமாரு. சாமி குத்தம் ஆயிறாம. இந்நா.. இந்த பேப்பருல வடைய நல்லா அமுக்கி சாப்பிடு. இல்லாட்டிக்கி எண்ணை நெஞ்சுக்குள்ளயே நின்னுக்கிட்டு பெசையும்லா”..“எளவு பேப்பருல என்னல போடுதானுவோ..ஒபிசி ஒபிசி அப்டின்னு..ஒரு ஈரமண்ணும் வெளங்கல போ” என்றபடி இட ஒதுக்கீடு ரத்து செய்தியின் மேல் மசால் வடையை வைத்து அமுக்கி, பிழிந்து போட்டான் சுகுமார். “கவருமென்டே இவனுவொளுக்கு மொட்டை அடிச்சிட்டு கெடக்கு இவனுவோ முருயனுக்கு மொட்டை அடிக்கேன்னு பேசிட்டுப் போறானுவோ…கிறுக்குப் பயலுவோ..”, என்றபடி அண்ணாச்சிக்கு டீக்காசை கொடுத்துவிட்டு நகர்ந்தான் குமார்.
இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குதோ..? ????????pic.twitter.com/6HFX9CArod
— கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@GreeseDabba2) July 18, 2020
**ஜேம்ஸ் ஸ்டான்லி**
கொரோனாவ வெட்டியே கொல்லுவோமுடா.. எங்களுக்கு எதுக்குடா OBC டாக்டர் சீட்டு..
**தர்ம அடி தர்மலிங்கம்**
இட்லி பூ கூட மலரும் தாமரை மலராதுன்னு இப்ப தான் தெரிஞ்சிருக்கு போல!
**கடைநிலை ஊழியன்**
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.182 கோடிக்கு மது விற்பனை – செய்தி
அரசு நவ் : 182 கோடி பத்தாதே டா..
**மயக்குநன்**
தமிழகத்தில் எந்த மாவட்டமும் இனி பிரிக்கப்படாது!- முதல்வர் பழனிசாமி.
அதான்… கொரோனா ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரிச்சு மேய்ஞ்சுக்கிட்டு இருக்கே..?!
OBC மக்களின் கல்வி உரிமை குறித்து அக்கறையின்றி, மோடிஜி மனது புண்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கும் அடிமை அமைச்சர்!#BJPbetraysOBC #OBCReservations pic.twitter.com/XC0M8IqXYG
— #DMK4TN (@DMK4TN) July 19, 2020
**ஜேம்ஸ் ஸ்டான்லி**
சென்னையன்ஸ் யெஸ்டர்டே: அண்ணே.. மீன் நல்லா கழுவி குடுங்க.. கொரோனா பரவிடாம..
**கோழியின் கிறுக்கல்**
மனைவி மற்றொருப் பெண்ணைப் பற்றி உங்களிடம் பேசுவது, மீனுக்கு தூண்டில் புழுவை போடுவது போலவே! ஆசைப்பட்டு வாயை திறந்தால், மசாலா தடவி வறுத்து மென்று துப்பி விடுவார்கள்!!
Watch Fully..???????????????????? pic.twitter.com/IoD4gvEYvI
— James Stanly (@JamesStanly) July 18, 2020
**மயக்குநன்**
கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும்!- மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ்.
கடைசியில… கோமியத்தில் இருந்துதான் கொரோனா வேக்ஸினைக் கண்டுபிடிச்சு இருக்காங்க போல..?!
**ஏவின் மனோ**
அவர்கள் கையில் பைபிளும்,எங்கள் கையில் நிலமும் இருந்தது. கண்களை மூடி ஜெபிக்க சொன்னார்கள். கண் திறந்தபோது; எங்கள் கையில் பைபிளும்,அவர்கள் கையில் “ஆப்பிரிக்கா”வும் இருந்தது!.
-ஆப்பிரிக்காவின் அன்றைய நிலை.
அவர்கள் கையில் கந்த சஷ்டி கவசமும்,எங்கள் கையில் இட ஒதுக்கீடும் இருந்தது. நாக்கை நீட்டி பஞ்சாமிர்தத்தை நக்க சொன்னார்கள். நக்கிட்டு நிமிர்ந்து பாத்தா “இட ஒதுக்கீடு” நக்கிட்டு போயிடிச்சி!.
-தமிழகத்தின் இன்றைய நிலை.
**-லாக் ஆஃப்**
�,”