செவ்வாழ, உனக்கு இப்படி ஒரு பிரச்னையா? :அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

‘மச்சான் குமாரு, ஆஃபர் இருக்கேன்னு ஆன்லைன்ல அம்பது ரூபாவுக்கு பிரியாணி ஆர்டர் பண்ணது தப்பா போச்சுடா’ன்னு ஆஃபீஸ விட்டு கெளம்பும்போது என் ஃப்ரெண்டு பரிதாபமா மொகத்த வச்சுகிட்டு சொன்னான். அவனோட பிரச்னை என்னன்னு அவன் ஃபேஸே காட்டி கொடுத்திருச்சு. வாடா மச்சான் வாழைப் பழம் வாங்கி கொடுக்குறேன்னு சொன்னா, ‘ஐயோ! வேணாம்பா பிரியாணியில கலப்படமோன்னு பயந்திட்டு நான் உன்கிட்ட சொன்னா, ஒரே அடியா என்ன சாகடிக்க பிளான் பண்றியா?’ன்னு கோவமா கேக்குறான். என்னடா இப்படி சொல்லிட்டன்னு கேட்டா, ‘இந்த ஃபேஸ்புக், டிக்டாக் எல்லாம் நீ பாக்குறது இல்லையா? இங்க பாரு’ன்னு வீடியோ ஒண்ண காட்டுறான். ஒருத்தர் செவ்வாழைப் பழத்த சோப்பு போட்டு கழுவுறாரு. பாத்தா செவ்வாழைபழம் திடீர்ன்னு மஞ்ச வாழைப்பழமா மாறிருச்சு. ‘இதில பெயின்ட் அடிச்சாங்களா இல்ல மருந்த ஊத்தினாங்களாண்ணே தெரியலடா’ன்னு சொல்லி பயப்படுறான். இத கேட்டிட்டு இருந்த இன்னொருத்தர், ‘அட போப்பா, யாரு என்ன சொன்னாலும் நம்பிட்டு வீடியோவ தூக்கிட்டு வாங்க. இதோ இதோட உண்மைய சொல்லி இன்னொரு வீடியோ இருக்கு. செவ்வாழை பழத்த கையால தேச்சாலே கலரு மாறும்பா’ன்னு சொல்லி வீடியோ ஒண்ண காட்டுறாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் அந்த வீடியோவ பாத்திட்டு என் நண்பன் பிரச்னைய தீத்துகிட்டு வர்றேன்.

**செந்திலின்_கிறுக்கல்கள்**

வீட்டில் ஆளுக்கு ஏற்றார் போல் சமைப்பது மட்டும் அல்ல பேசுவதிலும் கெட்டிகாரர்

“மனைவி”

**கோழியின் கிறுக்கல்!!**

இது மாறிவிடும் என்று எண்ணம் மட்டும் தான் மாறாமல் இருந்து கொண்டிருக்கிறது!!

**anbeSelva**

பாஜகவின் பாசிசத்தை எதிர்க்கும் கேரளா சினிமா கலைஞர்கள்..

நம்ம ஊர்ல பேர மட்டும் புரட்சி தளபதி, இளைய தளபதின்னு வச்சுக்கிறானுங்க, எவனும் வாய மட்டும் தொறக்க மாற்றானுங்க..

**ஜோக்கர்**

நமக்கு “பிடிச்ச மாதிரி வாழனும்”னு ஆசைப்படுறப்பதான்,

இந்த மனசாட்சி இதை “நல்லதா கெட்டதா” என ஆராயதொடங்குகிறது.

**ச ப் பா ணி**

தமிழ் பேசத் தெரியும்,

எழுதத்தெரியும்

டைப் செய்யத் தெரியாது

இன்றைய தலைமுறை

**mohanram.ko**

ஒருத்தர் பிசியா இருப்பதாக காண்பிக்க, அவர் ஆன்லைன் வராமல் இருப்பதே போதுமானதாக இருக்கிறது

**செந்திலின்_கிறுக்கல்கள்**

பெரிய இடத்தில் இருந்து செய்யும் சின்ன தப்பு…உண்மையில் பெரிய தப்பாகும்..!

**கிப்சன்**

80 ஆண்டுகளுக்கு முன்னால் உன் தாத்தா பாகிஸ்தான்ல பிறந்தாரு அதனால உனக்கு குடியுரிமை கிடையாது

ஒரு நியாயம் வேணாமாடா 80 வருசத்துக்கு முன்ன பாகிஸ்தானே கிடையாதேடா

**கிப்சன்**

எங்கிட்ட ஆதார் அட்டை இருக்கு நான் இந்தியன்

சாரி பாஸ் தேசிய குடியுரிமைக்கு ஆதார் அட்டை செல்லாதுனு நீதிமன்றம் சொல்லிருச்சு உங்க தாத்தாவோட பிறப்பு சான்றிதழ் இருந்தா காமிங்க

**ராக்கிங் கில்லர்**

வாழ்க்கை என்பது வாட்சப்பில் வரும் போட்டோக்கள் மாதிரி திறந்து பார்க்கும் போது தான் முழுமையாக தெரியும்…

**SHIVA SWAMY.P**

நினைவுகள் ஆழமாக அலைத்துச்செல்ல செல்ல கண்கள் அழத்தொடங்கிவிடுகிறது…!!!

**நறுமலர்**

உறவுக்கு மறு பெயர் பெருங்’காயம்’

சிலருக்கு மணமாய்

சிலருக்கு ரணமாய்

**கார்த்திக் தமிழன்**

நீங்களே மகிழ்ச்சியாக இருங்கள்…! முடியவில்லையா?? மகிழ்ச்சியானவர்கள் மத்தியில் இருங்கள்..!!

**ச ப் பா ணி**

ஜி.எஸ்.டி வருவாயை உயர்த்தத் திட்டம்! மத்திய அமைச்சர் நிர்மலா

சீதாராமன்

-ஜிஎஸ்டி உயரும் முன்னே

பொருளாதாரம் உயரும் பின்னே

**பாட்டி வைத்தியம்**

முக அழகையும் சருமத்தில் பளபளப்பையும் கவர்ச்சியான நிறத்தையும் பெற பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பசலைக் கீரையால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலுடன் வெளியாதல், வெள்ளை ஒழுக்கு அகியவை நீங்கும்

**ரமேஷ்.ஏ**

நாம ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுட்டு இருக்கும் போது மத்தவங்க பேசறது கேட்காது..,ஆனா நாம என்னா பேசறம்னு நமக்கு நல்லா தெரியும்.., அதுபோல தான் அவன் அவன் பிரச்சனை அவனுக்குதா தெரியும்…!!!

**ஆர்வக்கோளாறு**

காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது – மோடி

ஆமாமா .. சொல்றவரு அரிச்சந்திரனின் அப்டேட்

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share