‘தம்பி, பத்திரமா கடைக்குப் போய் கொஞ்சம் பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் தூள் எல்லாம் வாங்கிட்டு வாப்பா’ன்னு காலையில அம்மா சொன்னாங்க. ‘என்னம்மா சாப்பாட்டுக்கு ரசமா?’ன்னு நான் கேட்டா, ‘அது இல்லப்பா இத எல்லாத்தையும் ஒரு டம்ளர் தண்ணில கலந்து உப்பு போட்டு கஷாயம் வச்சு 5 நாள் வெறும் வயிற்றில குடிச்சா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமாம். அப்போ தான் கொரோனா விலகி இருக்கும்’னு விளக்கம் சொல்றாங்க. ‘இதை என் கிட்ட சொன்னதோட இருக்கட்டும். வெளிய யார்கிட்டயும் சொல்லிராதீங்க. வதந்தி பரப்புறதா சொல்லி எதாவது பிரச்னை வந்திரப் போகுது.’ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க, ‘குமாரு, இதை நானா சொல்லலப்பா, அமைச்சர் சொன்னாரே, அந்த மருந்து தான். அவரு சொன்னா சரியா தான் இருக்கும். நீ போய் வாங்கிட்டு வா’னு சொல்றாங்க. நீங்க அப்டேட்ட படிங்க. நான் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திடுறேன்.
**எனக்கொரு டவுட்டு ⁉**
ஆஃபீஸ் வந்து 12 மணி ஆனதும் பசிக்குதோ இல்லையோ, காய்கறி வெட்ட கை பரபரக்குறது எல்லாம் டிசைனா மாறிடுச்சு..!
**கோழியின் கிறுக்கல்!!**
“Call me when you are free” என்று வரும் குறுஞ்செய்தி, ‘உன்னை திட்டுவதற்கு போதிய நேரம் தேவை’ என்றும் பொருள்படும்!!
**ச ப் பா ணி**
பேசாம கல்யாணம் பன்னிக்க என்பதில்
“பேசாம” என்பதுதான் பேசிக் ப்ளூபிரிண்ட் மண வாழ்க்கைக்கு
**நாகராஜ சோழன் MA. MLA**
மீன் கூட தூண்டிலுக்கு
தப்பிக்கலாம்
வாயை
மூடிக் கொண்டிருந்தால்.
**இதயவன்**
மாத்துறோம் சொன்னதும் கொரோனாவ கட்டுபடுத்தி இயல்பு நிலைக்கு மாத்துறோம்னு நினைச்சுட்டயா அண்ணாமலை?
நாங்க ஊர் பெயரை மாத்துறோம்
**மித்ரன்**
கொடுமையான விசயம் என்ன தெரியுமா சார்…
நமக்கு பிடிக்காத கத்திரிக்காய நம்மள விட்டே வாங்கிட்டு வர சொல்றது தான் சார்…
**சரவணன். ℳ**
அய்யா, நோயாளிகளுக்கு படுக்கை வசதியில்லாமல் தவிக்கறாங்கன்னு சொல்றாங்க…
அமைச்சர் ~ யாருய்யா அப்படி சொன்னது, அவங்க மேல கேஸ் பதிவு பண்ணுங்க…
நம்ம வானதி அம்மாங்கய்யா…
அப்படியா… சரி.. சரி, படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்துடுங்க….
**கோழியின் கிறுக்கல்!!**
என் வாழ்க்கை திரைப்படம் வெற்றியோ தோல்வியோ எதுவாகிலும்,
அதன் ‘திரைக்கதை’ நான் எழுதியதாக இருக்க வேண்டும்!!
**ச ப் பா ணி**
நார்மலா? சிசேரியனா?
என்பதோடு கொரொனா டெஸ்ட் குழந்தைக்கு எடுத்தாச்சானு கேட்கும் காலத்தில் வாழ்கிறோம்
**மெத்த வீட்டான்**
இந்த வெயிலுக்கு கொரோனா போயிடும்னு சொன்னாங்க
வெயில் காலம் போயிடுச்சு
கொரோனா நின்று ஆடுது !
**ரஹீம் கஸ்ஸாலி**
மக்கள்: இந்தியாவை விட்டு போகும் ஐடியாவே இல்லையா…?
கொரோனா: மற்ற நாட்டிலெல்லாம் என்னை விரட்ட ஐடியா பண்ணிட்டு இருக்காங்க. இந்தியாவில்தான் என்னோடு வாழ பழகிக்கங்கன்னு அட்வைஸ் பண்றாங்க. இப்படி ஒரு அன்பான நாட்டை விட்டு நான் ஏன் போகணும்?!
**சரவணன். ℳ**
உ.பி.யில் ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு ஜனாதிபதி பெயர் தெரியாத அதிர்ச்சி தகவல்-போலீஸ் விசாரணையில் அம்பலம்…
ஜனாதிபதின்னு ஒரு பதவி இருக்கறதெல்லாம் உ.பி.காரங்களுக்கு தெரிஞ்சிருக்குங்கறதே எங்களுக்கு அதிர்ச்சியா இருக்கு…போவியா…
**ஜோக்கர்**
“நியாயம்” என்பது யாதெனில்,
நமக்கு கிடைத்த அத்தனைக்கும் “கடின உழைப்பும், விடா முயற்சியும்” காரணமென்பதும்,
கிடைக்காத அத்தனைக்கும் “அதிர்ஷ்டமும், காலமும்” காரணமென்பதுமே..!!!
**amudu**
மொபைலுடன் வெளியே சென்ற அம்மா வேகமாகவும், மொபைலை வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்ற அம்மா மெதுவாகவும், வீட்டிற்கு வர வேண்டும் என்பதே குழந்தைகளின் விருப்பம்.
**-லாக் ஆஃப்**
�,”