2002ஆம் ஆண்டு ‘பைவ் ஸ்டார்’ என்ற படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசி கணேசன். 2003ஆம் ஆண்டு ‘திருட்டுப் பயலே’, 2004ஆம் ஆண்டு ‘விரும்புகிறேன்’ மற்றும் 2009ஆம் ஆண்டு ‘கந்தசாமி’ என நான்கு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, ‘திருட்டு பயலே 2’ போன்ற படங்களை இயக்கியிருந்தார். தற்போது இந்தியில் ‘தில் ஹே கிரே’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து தமிழில் தான் இயக்கவிருக்கும் படத்தின் தலைப்பினை சுசி கணேசன் அறிவித்துள்ளார். அந்தப் புதிய தமிழ்ப் படத்துக்கு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
1980-களில் மதுரையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் பின்னணியைக்கொண்ட இந்தப் படம் ஆக்ஷன் டிராமாவாக உருவாகவுள்ளது. முழுக்க, முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இதன் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் சுசி கணேசன். இந்தப் படத்தை சுசி கணேசனின் 4 V என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
**-அம்பலவாணன்**
�,