சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ள டக்கர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து சித்தார்த் நடித்திருந்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியானது. இதைத் தொடர்ந்து கார்த்தி ஜி.கிருஷ் இயக்கும் புதிய படத்தில் சித்தார்த் நடித்துவருகிறார். ‘டக்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (டிசம்பர் 23) வெளியிடப்பட்டது. சித்தார்த் படு ஸ்டைலிஷ்ஷான லுக்கில் இருக்கும் போஸ்டரை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
Here it is, the Stylish First Look of @Actor_Siddharth ‘s #Takkar….Congrats & GB#TakkarFirstLook pic.twitter.com/HQBS13AXvT
— Vishal (@VishalKOfficial) December 23, 2019
பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ், அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். சித்தார்த் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.�,”