சமீபத்தில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான ‘ஆலா வைகுந்தபுரமுலு’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அத்துடன் படத்தில் இடம்பெற்ற ‘புட்ட பொம்மா’, ‘சாமஜவரகமணா’, ‘ராமுலோ ராமுலா’ போன்ற பாடல்களும் சமூகவலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. பலரையும் ரசிக்க வைந்த இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் யூட்யூப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அத்துடன், டிக் டாக் தளத்திலும் இந்தப்பாடல்களைப் பயன்படுத்தி பலரும் வீடியோ வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் சிறு குழந்தைகள் இணைந்து, ‘சாமஜவரகமணா’ பாடல் பாடும் வீடியோவை இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர்களது இனிமையான குரலும், மழலை மொழியும் அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது. அத்துடன் பாடலுக்கு ஏற்றவாறு அந்தக் குழந்தைகளின் முகபாவனையும் அனைவரது மனதையும் கொள்ளையடிக்கும் விதத்தில் இருந்தது. அந்தப் பதிவில், ‘சாமஜவரகமணா பாடல் வீடியோக்களில் நான் பார்த்ததிலே க்யூட்டானது இது தான். இவர்களது நமது அன்பைப் பொழிவோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
The cutest I have seen for #Samajavaragamana #sensationalsamajavaragamana on the social media
Let’s shower some love on them ♥️ hoowwwwwwww cute ❤️????????#AlaVaikunthapuramuloo #avpl ???? pic.twitter.com/VJGKPDTQZM— thaman S (@MusicThaman) March 13, 2020
அதனைப் பார்த்த பாடகி ஸ்ரேயா கோஷல், ‘அடக்கடவுளே, இது அத்தனை க்யூட்டாக இருக்கிறது. அந்த பெண் குழந்தை எத்தனை அழகாகப் பாடுகிறார். அவருடன் இருக்கும் சிறுவன் ஒரு ராக் ஸ்டார். அத்தனை கடினமான வார்த்தைகளையும், அவ்வளவு எளிதாகப் பாடுகிறார்.’ என்று ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடலின் மேல் வெர்ஷனை சித் ஸ்ரீராமும், ஃபீமேல் வெர்ஷனை ஸ்ரேயா கோஷலும் பாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளின் பாடலும், ஸ்ரேயா கோஷலின் பதிவும் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”