சமந்தாதான் எனக்கு சிறந்த ஜோடி: நாக சைதன்யா

entertainment

திரையில் சமந்தாதான் எனக்கு சிறந்த ஜோடி என நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா -சமந்தா கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த வருடம் கணவன் மனைவி உறவில் இருந்து பிரிந்தனர்.

சமந்தாதான் பிரிவிற்கு காரணம் என்ற ரீதியில் ஏராளமான தகவல்கள் வெளியாக இந்த பொய் செய்திகள் எல்லாம் தன்னை மனதளவில் காயப்படுத்தியதாகவும் இதுபோன்ற மன உளைச்சலில் இருந்து வெளியே வர தன்னுடைய நண்பர்கள், ஆலோசகர்களது வழிகாட்டுதல்தான் முக்கிய காரணம் எனவும் சமந்தா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாக சைதன்யா தனது தந்தை நாகர்ஜூனாவுடன் இணைந்து நடித்திருக்கும் ‘பங்கார் ராஜூ’ திரைப்படத்திற்கான பேட்டியின் போது சமந்தாவுடனான பிரிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த நேரத்தில் நாங்கள் பிரிய வேண்டும் என முடிவெடுத்தது சரியானதுதான். அவர் மகிழ்ச்சியே எனக்கு முக்கியம். மேலும் திரையில் எனக்கு சிறந்த ஜோடி சமந்தாதான்” எனவும் தெரிவித்துள்ளார்.

சமந்தா – நாக சைதன்யா இருவரும் இணைந்து ‘ஏ மாய சேசேவே’, ‘மஜ்லி’, ‘மனம்’ ஆகிய திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0