கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘பெண்குயின்’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பெண்குயின்’. உளவியல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம் வரும் ஜூன் 19ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக ரிலீசாகவிருக்கிறது. திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் 8ஆம் தேதி ரிலீசாகும் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
Expect the unexpected.#PenguinOnPrime premieres June 19 in Tamil and Telugu, with dub in Malayalam.@KeerthyOfficial @EashvarKarthic @karthiksubbaraj @Music_Santhosh @Madhampatty @StonebenchFilms @PassionStudios_ #PassionStudios @SonyMusicSouth pic.twitter.com/PXxdMhXeQd
— amazon prime video IN (@PrimeVideoIN) June 6, 2020
இது தொடர்பான அறிவிப்பில் பெண்குயின் திரைப்படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் போஸ்டரில் நெற்றி, மூக்கு, உதடு என்று முகம் முழுவதும் காயங்களுடன் கண்களில் நீர் வழிய வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். அலங்கோலமான தோற்றத்தில் கீர்த்தி இருக்க, மழையில் குடை பிடித்துக் கொண்டு ஒருவர் நிற்பதாகவும் போஸ்டர் இடம்பெற்றுள்ளது. இந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு மலையாளத்திலும் வெளியாகவிருக்கிறது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”