Nமரைக்காயருக்கு வந்த சிக்கல்!

Published On:

| By Balaji

நடிகர் மோகன்லால் நடிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் வெளியாவதற்கு முன்பே, 67வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், சிறந்த திரைப்படம், சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபக்ட்ஸ் ஆகியவற்றிற்காக விருதுகளைப் பெற்றது. இப்படம் வெளியான பின்பு சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே சுமார் 100 கோடி ரூபாய்க்கு ப்ரீ புக்கிங் செய்யப்பட்டு வசூல் செய்தது. யுஏஇ பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட அன்றே சுமார்2.98 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இதன்மூலம் மலையாளப் படங்களில் அதிகம் வசூலித்ததாகக் கூறப்பட்ட துல்கர் சல்மானின் குரூப் படத்தின் யுஏஇவசூலை இப்படம் முறியடித்தது . இந்நிலையில்

தமிழ்ராக்கர்ஸ், மூவி ருல்ஸ், டெலிகிராம் மற்றும் பிற வலைதளங்களில் இப்படம் திருட்டு தனமாக முழு எச்டி பதிப்பில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share