அருள்நிதியின் அடுத்த படம்: பெயரை வெளியிட்ட வெற்றிமாறன்

entertainment

அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி-ஷ்ரத்தா நடித்து வெளியான ‘கே 13’ விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தநிலையில் நேற்று(ஜூலை 21) நடிகர் அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

MY NEXT MOVIE #DIARY …THANKS TO DIRECTOR @VetriMaaran SIR FOR RELEASING THE TITLE …THANKS TO MY DIRECTOR @innasi_dir@AravinndSingh PRODUCER KATHIRESHAN SIR AND TEAM …🙂🙂 pic.twitter.com/yG9bMGAkMP

— arulnithi tamilarasu (@arulnithitamil) July 21, 2020

அந்தத் தலைப்பை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் அவரது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகிவரும் இந்தப்படத்திற்கு ‘டைரி’ எனப்பெயர் வைத்துள்ளனர். உண்மை சம்பத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து வரும் இந்தத் திரைப்படத்திற்கு யோஹன் இசையமைக்கிறார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *