Xஅர்ஜுன்-ஜீவா இணையும் பேய்ப்படம்!

Published On:

| By Balaji

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘மேதாவி’.

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்கும் மூன்றாவது படம் இது. மே 15 அன்று தயாரிப்பாளர் சு.ராஜா, ‘மேதாவி’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் ஃபெப்சி தொழிலாளர்களுக்காக 5kg எடை கொண்ட 25,000 அரிசி மூட்டைகளை (1,25,000 kgs) வழங்கியுள்ளார்.

தேசிய விருது பெற்ற பாடல் ஆசிரியரும் இயக்குநருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் அர்ஜூன் – ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார் மற்றும் சாரா, ‘கைதி’ படம் தீனா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்கிறார்.

இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் மற்றும் படப்பிடிப்பு தொடங்கப்படும் தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் பா.விஜய் கூறியுள்ளார்.

**-இராமானுஜம்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel