போலி புராதன பொருட்களைத் தயாரித்து அவற்றை பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லி விற்பனை செய்து வந்த மோன்சன் மாவுங்கல் என்பவரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த மோசடி கும்பலுக்கும், இயக்குநர் சிறுத்தை சிவா தம்பியும் நடிகருமான பாலாவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மோன்சன் மாவுங்காவுக்கும், பாலாவுக்கும் தொடர்பு இருப்பதாக பல ஆடியோ ஆதாரங்கள் வெளிவந்தது. மோன்சனுக்கும், அவரது டிரைவர் அஜித்துக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது மோன்சனுக்கு ஆதரவாக பாலா, அஜித்துடன் பேசிய ஆடியோக்கள் வெளியானது.
இது தொடர்பாக பாலா அளித்துள்ள விளக்கம் வருமாறு…
“நான் கொச்சியில் இருந்தபோது மோன்சனின் பக்கத்து வீட்டில் வசித்தேன். இதனால், அவருக்கும் எனக்கும் நட்பு இருந்தது. அவர் நல்ல காரியங்கள் செய்து வந்தார். இதனால் அவரை எல்லாருக்கும் பிடிக்கும். நான் வசித்த பகுதில் இருந்தவர்கள் அவருடன் நல்ல நட்பில் இருந்தார்கள்.
மோன்சனுக்கும், அவரது டிரைவர் அஜித்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு போலீஸ் வரை சென்றபோது இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது உண்மைதான். ஆனால் அவர் செய்த மோசடி குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்கிறார்
தமிழில் சில படங்களில் நடித்துள்ள இவர் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார்.
**-இராமானுஜம்**
�,”