14 நாடுகளில் குழந்தைகள் படத்துக்கு தடை :ஏன்?

entertainment

இஸ்லாமிய கொள்கைகளை கடைப்பிடிக்கும் அரசுகள் ஆளும் நாடுகளில் கொடூரமான வன்முறை காட்சிகள், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தும் படங்களை தங்கள் நாடுகளில் திரையிட அனுமதிப்பதில்லை.

இந்நிலையில், முதல்முறையாக குழந்தைகளுக்கு என்று தயாரிக்கப்பட்ட அனிமேஷன் படம் ஒன்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் இணைந்து ‘டாய் ஸ்டோரி’ வரிசை அனிமேஷன் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது. இந்தப் படங்கள், உலகம் முழுவதும் குழந்தைகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வயது வித்தியாசம் இன்றி
இந்த வகை படங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

அனிமேஷன் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கியமான கேரக்டர் பஸ்லைட் இயர். தற்போது இந்த கேரக்டரை மையப்படுத்தி லைட் இயர் படம் வெளியாகி உள்ளது. இதனை அங்கஸ் மேக்லேன் இயக்கியுள்ளார். உலகம் முழுவதும் நேற்று ( 17.6.2022) இந்த படம் வெளியானது. இந்த நிலையில் அரபு நாடுகள், எகிப்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, லெபனான் உள்ளிட்ட 14 நாடுகள் தடைவிதித்துள்ளது.

இதற்கு காரணம் படத்தில் வரும் ஹீரோ இரு பெண்களை திருமணம் செய்து கொண்டவராக இருக்கிறார். லிப் லாக் முத்தக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. அதோடு ஓரினசேர்க்கை முத்தக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது குழந்தைகள் பார்க்கும் படம் என்பதால் இந்த காட்சிகள் அவர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தடைவிதிக்கப்பட்டிருப்பதாக சம்பந்தபட்ட நாடுகள் விளக்கம் அளித்துள்ளன.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.