rஇது தான் ஷாக்குக்கு காரணமா? அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

இன்னைக்கு திடீர்னு பக்கத்து வீட்டு அண்ணாவுக்கு ஒடம்பு சரியில்லாம ஆச்சு. பாவம், மயக்கம் போட்டு கீழ விழுந்திட்டாரு. பதறிப்போய் அவர எழுப்பி ஹாஸ்பிட்டல் போலாமா அண்ணானு கேட்டா, ‘அய்யோ தம்பி, இல்லாத கொரோனா எங்க வந்திருமோன்னு பயமா இருக்கு’ன்னு சொல்றாரு. ‘சரிண்ணே, திடீர்ன்னு மயக்கம் வர்ற அளவுக்கு என்ன ஆச்சு’ன்னு கேட்டா, ‘ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு’ன்னு சொல்றாரு. இன்னைக்கு எங்க ஏரியாவில முழுசா பவர் கட். இந்த நிலைமையில எப்படி அவருக்கு ஷாக் அடிச்சிருக்கும்னு கேட்டேன். அதுக்கு அவரு, ‘தம்பி, ஷாக் தான். ஆனா அடிச்சது கரண்ட் இல்ல. கரண்ட் பில்லு’ன்னு சொல்றாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் அவரை காப்பாத்திட்டு வர்றேன்.

**சரவணன். ℳ**

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்வருக்கே கொரோனா வராதுன்னு சொன்ன மனுசன்டா.. அவரைப் போய் அட்டாக் பண்ணிருக்கியே… அடேய் கொரோனா, நீ நல்லாவே இருக்க மாட்ட..

**மயக்குநன்**

கொரோனா வைரஸ் 4 மாதங்களுக்கு மேல் எந்த நாட்டிலும் இருக்காது, கிளம்பி விடும்!- அமைச்சர் உதயகுமார்.

என்னவோ அது இந்தியாவுக்கு ஜாலி டூர் வந்திருக்கிற மாதிரியே சொல்றாரே..?!

**நாகராஜ சோழன் MA.MLA**

வளர்மதிக்கு இருக்கு…

தங்கமணிக்கு இருக்கு…

செல்லூர் ராஜு வுக்கு இருக்கு…

ஆன சமூக பரவல் மட்டும்

இல்ல

**amudu**

தேசியம், குடியுரிமை, மதச்சார்பின்மை பாடங்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்.

நாட்டிலிருந்தே நீக்கப் போறோம். பிறகு பாடத்திட்டத்தில் மட்டும் எதுக்குன்னு நினைச்சுட்டாங்களோ.!?

**தர்மஅடி தர்மலிங்கம்**

மனைவிக்கு வீட்டு வேலை

கணவனுக்கு வீட்டிலிருந்து வேலை.

இப்போ குழந்தைங்களுக்கு வீட்டிலிருந்தே தொலைக்காட்சி வழி கல்வி..

அடேய் கொரோனா உன்னால இந்த பஸ் ஸ்பேரும் பஸ் பீஸூம் மூனு மாசம் நான் கட்டவே இல்லடா!?

**balebalu**

‘இஞ்சி தின்ற குரங்கு போல்’ என்ற பழமொழியை இனிமேல் ‘கபசுர குடிநீர் குடித்த மனிதன் போல’ என்று மாற்றி வைத்து கொள்ளலாம் ! என்ன ஒரு கசப்பு !

**மயக்குநன்**

ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு பேருதவியாக இருந்தது!- மோடி.

அந்த கொண்டைக்கடலை இன்னும் வந்து சேரலை ஜீ..!

**PrabuG**

கொரோனா அறிகுறி இருந்ததால் பேருந்திலிருந்து இழுத்து தள்ளப்பட்ட இளம்பெண் அரை மணி நேரத்தில் உயிரிழந்தார்.

கொரோனாவை விட குரூரமமானது இந்த மனித இனம்!!

**ச ப் பா ணி**

அடுத்தவன்

கால்களை எதிர்பார்த்து

வாழும் வாழ்க்கைதான்

என்றாலும் அடுத்தவன்

கைகளை எதிர்பார்த்து

இவன் வாழ்ந்ததேயில்லை

-செருப்புத்தொழிலாளி

**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**

தடுப்பூசியை டெஸ்ட் பண்ண Volunteer ஸ்க்கு கொரோனா வைரஸை ஊசி மூலமா செலுத்த போறாங்களாம்..

சனிக்கிழமை சாயங்காலமா காய்கறி வாங்க கடைவீதிக்கு போயிட்டு வந்தா அதுவே வரப்போகுது..

**உள்ளூராட்டக்காரன்**

ஐயா, அதான் எல்லா ஊருக்கும் கொரோனா பரவிடுச்சே…

இனிமேலாவது சென்னைல இருந்து ஊருக்கு போக ஈ-பாஸ் approve பண்ணுவீங்களா?

**மித்ரன்**

~ ஏண்ணே அவனை அடிச்சீங்க..?!

அதான் எல்லையில் சீன ராணுவம் பின்வாங்கிருச்சே டிக்டாக்கை மறுபடியும் எப்ப ஓப்பன் பன்னி விடுவீங்கன்னு கேக்குறான்..?!

**ஜோக்கர்**

நம்மள பார்த்து பத்து பேரு பயந்து ஓடுறதுக்கு “நாம பெரிய ரவுடியாதான்” இருக்கணும்ன்னு அவசியம் இல்லை,

“கொரோனா நோயாளியாக” இருந்தால் கூட போதுமானது.

**ச ப் பா ணி**

மீதியான உணவில் இருக்கிறது அம்மாவின் பசி

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share