நேசமணிக்கே டஃப் குடுக்குற பெயின்டிங் கான்டிராக்ட்டா? அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

‘எங்க கோயம்புத்தூரு மாவட்டத்துக்கே எதோ அவசரமா இருக்குதுங் போல’. என்ற அண்ணன் கான்டிராக்டர் நேசமணிக்கே டஃப் குடுக்குற மாதிரி பெயின்டிங் கான்டிராக்ட் எல்லாம் எடுத்து யாரோ செஞ்சுட்டு இருக்காங். ஆனா பாருங், அவசரத்துல பில்டிங்கிக்கி அடிக்கிற பெயின்ட செலைக்கு அடிச்சு போட்டாங், கண்ணு தெரியாத பயலுங்கோ. என்ன அவசரமோ தெர்லீங்கோ.’, ‘இப்புடித்தானுங் பசி நேரத்துல போராட்டம் பண்ணச் சொல்லிட்டாங்னு கோவிச்சுக்கிட்டு உண்ணாவெரதப் போராட்டத்தப்ப பிரியாணி குண்டாவ தூக்கிட்டு போய்ட்டானுங். ஆருரா அது கோயம்புத்தூருக்காரவுக இத்தனை அவசரத்துல வேல செஞ்சுட்டு இருக்கீங்? இதெல்லாம் ரொம்ப தப்புங். பாக்குற பயபூரா நம்மள தப்பா நெனைக்குறாங் அல்லோ? இனிமேட்டுக்கு போராட்டம் கீராட்டம் பண்ணீங்கன்னா நிறுத்தி நெதானமா செஞ்சுப் போடுங். என்ன நான் சொல்றது சரிங்களா?’, அப்புடின்னு சலம்பிக்கிட்டு இருந்த கோயம்புத்தூரு நண்பர சரிக்கட்டிட்டு வெளிய வர்றதுக்குள்ள குமாருக்கு கண்ணு வேர்த்திருச்சுங்கோ…

**சரவணன்**

அதான் ஏற்கனவே கொரோனா வந்து எல்லோரையும் பிரிச்சு வச்சிருக்கு இல்ல. அப்புறம் நீ ஏன்டா இங்க வந்து உயிரை வாங்கற… ” ~ஆடிமாதம்

எதுக்குங்க பையனைப் போட்டு அடிக்கிறீங்க…?

வடை வாங்கிட்டு வரச்சொன்னா பிரதமர் சுட்டதா நிதியமைச்சர் சுட்டதான்னு கேக்கறான்…

**செந்திலின் கிறுக்கல்கள்**

ஏண்ணே, இந்த epass ல கல்யாணம், இறப்புக்கு போற மாதிரி,

ஆடி மாதம் புதுமணத் தம்பதிகளை பிரித்து வைக்கனு ஆப்ஷன் இருக்கா?

**மயக்குநன்**

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது!- முதல்வர் பழனிசாமி.

சின்னம்மா ரிலீஸான பிறகு கட்சியைத்தான் பிரிக்க வேண்டி வருமோ..?!

**கோழியின் கிறுக்கல்**

‘நல்லா படிச்சா நல்லா இருக்கலாம்’ என்பது,

நம் மீது திணிக்கப்படும் ஆகப்பெரும் மூட நம்பிக்கை!!

**சரவணன். ℳ**

மின்கட்டண கணக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை

– முதல்வர் பழனிசாமி.

அப்படின்னா கால்குலேட் பண்றவங்க கிட்ட தான் குளறுபடி இருக்கு.

**ரஹீம் கஸ்ஸாலி**

2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை இந்தியா இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது…!- பிரதமர் மோடி

அதற்குள், தெய்வம் தந்த வீடு வீதியிருக்குன்னு அனைவரும் தெருவுக்குள் வராமல் இருந்தால் சரிதான்.

**இதயவன்**

கேரளாவில் கொரோனா சமூக தொற்றாக மாறியதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு

தினசரி நாலாயிரத்துக்கும் மேல தொற்று வர தமிழ்நாட்டிலயே இன்னும் சமூகபரவல் ஆகல.,மொத்தமே 11ஆயிரம் வச்சி இருக்கிற உங்களுக்கு எப்படி சமூக தொற்று ஆகும்?இருங்க யா எங்க சுகாதார செயலாளரை கூட்டு வரேன்?!

**தர்மஅடி தர்மலிங்கம்**

ஃபேஸ்புக் காதலியை காண எல்லை தாண்டி பாகிஸ்தான் செல்ல முயன்ற இளைஞர்….

மடக்கி பிடித்த பாதுகாப்பு படை வீரர்கள்!

மனசுல பெரிய ராஜா தேசிங்குன்னு நெனப்பு e-பாஸ் இல்லாம போனா விட்ருவாங்களா!

**ச ப் பா ணி**

ஒருமுறை MSV பாட்டு எழுத ஸ்டூடியோவுக்கு அழைத்தார். அவருடைய ரோலக்ஸ் வாட்ச்,தங்கச்செயினை ஆர்மோனியப் பெட்டி மேல வைத்தார்.

நீங்க நல்லா ஒரு பல்லவி சொன்னா இது அத்தனையும் உங்களுக்குனு சொன்னார். அப்போது எழுதியதுதான் “காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்”

-வாலி

**மயக்குநன்**

2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும்!- பிரதமர் மோடி.

கிரஹப்பிரவேசத்துக்குதான் கொண்டைக்கடலை தருவார் போல..?!

**இதயவன்**

ஐரோப்பிய பணக்காரர்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் அயர்லாந்தில் தனித்தீவு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினார்

ஆமா குமாரு யாரு இவரு நித்தியானந்தா கஸ்ஸின் பிரதரா?!

**ஜோக்கர்**

ஏண்டா, சண்டைன்னு வந்தா மட்டும் முருகர விட்டு குடுக்க மாட்டுக்கீங்க. ஆனா அவர மாதிரி வேற சாதியில கல்யாணம் பண்ண மாட்டேங்குறீங்களடா??!!

**கோழியின் கிறுக்கல்!!**

ஏம்பா, தென் கொரிய நாட்டோட ஏதும் வாய்க்கால் தகராறு இல்லை இல்லப்பா,

புதுசா கார் வாங்கலாம்னு இருக்கேன், வாங்கினதுக்கு பிறகு வந்து அதை கொளுத்துன்னு வந்து நிக்காதீங்கப்பு!!

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share