பஞ்சாமிர்தத்துக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

முருகன் யாருக்கு சொந்தம் அப்டின்னு வள்ளி தெய்வானையை விட அதிகமா ரெண்டு குரூப்பும் வேகமா குடுமிப்பிடி சண்டையில இறங்கியிருக்கு. சு+பிராமணியன் தான் முருகன் அப்டின்னு ஒரு தரப்பும், கந்து தான் கந்தன் அப்டின்னு அடுத்த தரப்பும் அடிச்சிட்டு இருக்காங்க. சைக்கிள் கேப்புல மலை மேல இருக்குற எல்லா ஆண்டிக் கோல முருகனும் தீர்த்தங்கரர் தான் அப்டின்னு இன்னொரு கோஷ்டி புதுசா கெளம்பியிருக்கு. இன்னிக்கு தேதியில ‘மோஸ்ட் வான்டட்’ கடவுள் முருகன் தான். தெய்வானையை முருகன் கட்டுன ஆதாரம் எங்கேன்னு ஒரு தமிழர் கொடி பிடிச்சுட்டு இருக்கார்; இன்னொருத்தர் முருகனை மோசமாக சித்தரிச்ச கமலஹாசன் மேல ஏன் இன்னும் கேஸ் போடலைன்னு நரம்பு புடைக்க கத்திட்டு இருக்கார். எது எப்டியோ..பழனி பஞ்சாமிர்தத்துக்கு ஒண்ணும் பிரச்னை வராதே? நம்ம பிரச்னை நம்மளுக்கு அப்டின்னு சொல்லிக்கிட்டே நடையைக் கட்டினான் குமாரு…

**கருப்பு மன்னன்**

நான் கருப்பாக இருப்பதால், எனக்கு நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டது’ – பாபா ராம்தேவ்

நெல்சன் மண்டேலா அரவிந்த் சாமி கலருல யா இருந்தாரு !!

**மயக்குநன்**

நம்பிக்கை ‘ஒளியைப் பரப்பிடும்’ வல்லமை வாய்ந்தது திருக்குறள்!- பிரதமர் மோடி.

அதான்… சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி ‘பல்பு’ கொடுத்திட்டீங்களே..?

**ஜோக்கர்**

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவை விட சிறந்த ஆட்சியை அன்புமணி தருவார் ~ ராமதாஸ்

எங்கே, MP ஆனப்பிறகு பார்லிமென்ட் க்கு எத்தனை நாள் போயிருக்கார் ங்கிற அட்டெண்ட்டன்ஸ காமிக்க சொல்லு பாப்போம்.

**மயக்குநன்**

எனது சுயமரியாதையைக் காப்பற்றிக் கொள்வதே மிகப்பெரும் போராட்டமாக அமைந்தது!- சச்சின் பைலட்.

இங்கெல்லாம் துணை முதல்வர் பதவியைப் பெறுகிற வரைக்கும்தான் போராட்டமே..!

**ஆட்லின்**

முழுசா ஒரு ஐந்து லட்சம் பேருக்கு கொரோனா இருக்கா இல்லையானு சோதிக்க வக்கில்லை..!! இதுல 130 கோடி பேருக்கு குடியுரிமையை சோதிக்க போறேன்னு பில்டப்பு.!!

**ச ப் பா ணி**

“பார்டரில்” பாஸாகின்றன

பட்டுப் புடவைகள்

**கோழியின் கிறுக்கல்!!**

மக்கள் எதை எதை அதிகம் பயன்படுத்துறாங்களோ, அங்க அங்க ஆளைப் போட்டு வரியை பிடுங்கு!!

Sanitizerக்கு 18% GST- செய்தி!!

**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**

ஆடி மாசம் வழக்கமா புதுமண தம்பதிகளை பிரிப்பாங்க இந்த வருசம் கொரோனா அந்த வேலையை சுலபமாக்கிருச்சு.

இந்த வருசம் நடக்க இருந்த நிறைய கல்யாணமே தள்ளி போயிருச்சு.

**Harithranadhi Raja**

ஆடி கார் வாங்கணும் என்கிற கனவெல்லாம் காலப்போக்கில் ஆடித்தள்ளுபடியில் வாங்கின துணியைப்போல் சுருங்கிவிடுகிறது!

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share