நயன்தாரா மீது திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை?

Published On:

| By admin

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்யவந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் செருப்பு காலுடன் மாடவீதியில் நடந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது திருமணத்தை திருப்பதியில் நடத்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் திட்டமிட்டனர். பாதுகாப்பு மற்றும் 150 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட காரணங்களால் அங்கு திருமணம் நடைபெறவில்லை. இந்த நிலையில், மாமல்லபுரத்தில் 9.6.2012 அன்று திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதியர் 10.6.2022காலை திருப்பதியில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தனர். நண்பகல் 12 மணிக்கு நாள்தோறும் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டனர்

தொடர்ந்து கோயில் வளாகத்தில் திருமணத்திற்கு பிறகான போட்டோஷூட்டை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி நடத்தினர். விதிமீறி இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோயிலின் நான்கு மாட வீதியில் செருப்பு அணியக்கூடாது என கோவில் சார்பில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நயன்தாரா காலில் செருப்பு அணிந்தபடி இந்த போட்டோ ஷூட்டில் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக விசாரணை நடத்த கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share