சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகிவரும் படம் மாநாடு. இந்தப் படத்தில் சிம்பு நடிக்காமலேயே சிம்பு நடித்திருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா? கடைசி வரை வாசியுங்கள், சுவாரஸ்யம் புரியும்.
வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், கே.பாரதி, பிரேம்ஜி, படவா கோபி உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளங்களே நடித்துவருகிறது.
படத்துக்கான படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதன்பிறகு கொரோனா வந்துவிட்டதால் படப்பிடிப்பு நடத்தமுடியாமல் போனது. மீண்டும் படப்பிடிப்பு கடந்த நவம்பரில் தொடங்கியதும் புதுச்சேரியில் படப்பிடிப்பை நடத்தினார்கள். புதுச்சேரி படப்பிடிப்பின்போதுதான் நிவர் புயல் தாக்கியது. அதனால், அவுட்டோர் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. ஆனால், சிம்புவின் ஆதரவால் உள்ளரங்குக்குள் படப்பிடிப்பு நடந்தது.
அடுத்த கட்டமாக, ஏற்காடு மற்றும் புதுச்சேரியில் சுமார் ஒரு வாரமாகப் படப்பிடிப்பு நடந்துமுடிந்திருக்கிறது. அதில் சிம்பு, அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், பிரேம்ஜி நடிக்கும் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒருவர்கூட படப்பிடிப்புக்குப் போகவில்லையாம். எல்லா நடிகர்களின் டூப் ஆர்டிஸ்டுகள்தான் படப்பிடிப்பில் நடித்திருக்கிறார்கள்.
நடிகர்களின் தேதிகளை வாங்கிச் சென்று படப்பிடிப்பு எடுப்பதில் சிக்கல் இருப்பதால், டூப் வைத்து மேட்ச் செய்துவிட்டாராம் வெங்கட் பிரபு. மலைப்பகுதியான ஏற்காட்டில் நடக்கும் சண்டைக் காட்சிகள், சேஸிங் சீன்கள்தான் படமாக்கியிருக்கிறார்கள். அதனால், டூப் வைத்து அடையாளமே தெரியாத அளவுக்கு எடுத்து முடித்துவிட்டார்கள். சிம்பு இல்லாமலேயே சிம்பு நடித்த ஷூட்டிங் சிறப்பாக வந்திருப்பதாகவும் ஒரு தகவல்.
**ஆதினி**�,