vமுதன்முறையாக கப்பலில் புரொமோஷன் நிகழ்ச்சி!

entertainment

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் 100 கோடி ரூபாய் செலவில் வரலாற்று படமாக உருவாகியுள்ள ‘மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ இந்திய சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது. ஓடிடியில் வெளியாக இருந்த இந்தப் படம் கேரள மாநில அரசு, திரையரங்க உரிமையாளர்கள் தொடர் முயற்சியினால் டிசம்பர் 2ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவனை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

படம் வெளியாக இருப்பதைத் தொடர்ந்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படம் கடல் மற்றும் கப்பல் சம்பந்தப்பட்ட படம் என்பதாலோ என்னவோ, இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியை கப்பலில் நடத்தி பிரமிக்க வைத்துள்ளார்கள்.

படக் குழுவினருடன் ரசிகர்கள் சிலரும் மற்றும் கடற்படை அதிகாரிகளும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்றை மோகன்லால் வெளியிட்டுள்ளார். மலையாளத் திரையுலக வரலாற்றில் இதுபோன்று கப்பலில் ஒரு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை நடத்துவதும் இதுதான் முதன்முறை. தமிழ் சினிமாவில் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான கபாலி படத்துக்கு விமானத்தில் விளம்பரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**- இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *