சசிகுமார் நடிக்கும் பரமகுரு படத்தில் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த மானஸா ராதாகிருஷ்ணன் நடித்துவருகிறார்.
கென்னடி கிளப் படத்தை தொடர்ந்து கொம்பு வெச்ச சிங்கம்டா, ராஜவம்சம் ஆகிய படங்களில் நடித்து வந்தார் சசிகுமார். பல்வேறு கட்ட தயாரிப்பு நிலையில் இருக்கும் இப்படங்களில் ஒப்பந்தமான வேளையில், ‘பரமகுரு’ என்ற கதையை தேர்வு செய்தார் சசிகுமார். புலனாய்வு கலந்த திரில்லராக உருவாகும் இப்படத்தை மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்கின்றார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் நாயகியாக நடிக்கும் மானஸா படம் குறித்து கூறும்போது, நான் நடிக்கும் காட்சிகள் மூணாரில் படமாக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்த ஷெட்யூல் மதுரையில் நடப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது நிலவும் சூழலில் படம் எப்போது துவங்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்” எனக் கூறுகிறார். இதனிடையில் பவன் கல்யானின் புதிய படத்தில் மானஸா நாயகியாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.
இருப்பினும், இந்தப் படத்திற்காக தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று மானஸா கூறுகிறார். “இன்ஸ்டாகிராமில் மக்கள் என்னை ‘டேக்’ செய்யத்தொடங்கியபோது தான் அதைப் பற்றி நானே முதலில் கேள்விப்பட்டேன். நிச்சயமாக, அவர்கள் என்னை அணுகினால் நான் மகிழ்ச்சியடைவேன். ஆனால் இப்போது இவை வெறும் ஊகங்கள் தான் ”என்று மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும் இந்த 21 வயது மாணவி கூறுகிறார். மேலும் தனது கல்விக்கு இடையூறு விளைவிக்காமல் படங்களை தேந்தெடுக்க முயற்சிப்பதாகவும் கூறுகிறார் மானஸா.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”