{இறுதிவார எவிக்‌ஷன், சிறப்பு விருந்தினர் யார்?

Published On:

| By admin

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தின் சிறப்பு விருந்தினர், பரிசு தொகை, இறுதி வாரத்தின் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமாக தமிழில் பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஜனவரி மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. வழக்கம் போல பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதலில் நடிகர் கமல்ஹாசனே இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகிய பிறகு நடிகர் சிலம்பரசன் நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

வனிதா, நிரூப், தாமரை, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, சுருதி, அபிராமி, அனிதா, ஷாரிக் என முந்தைய ஐந்து சீசன்களில் இருந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கும் வகையில் 14 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். நேரலையாக 24*7 ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை தமிழ் பிக்பாஸ்ஸில் வராத பல காட்சிகள், போட்டி விதிமுறைகள் என பலவும் மாறின. அதன்படி, புகைப்பிடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பானது, ரம்யா, சதீஷ், சுரேஷ் சக்ரவர்த்தி என இரண்டிற்கும் மேற்பட்ட வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்தது போன்றவையும் நடந்தது.

இந்த வாரம் இறுதி கட்டத்தை நெருங்க இருக்கும் நிலையில், ஏப்ரல் 9 அன்று பிக்பாஸ் அல்டிமேட் இறுதி நிகழ்ச்சியின் ஒளிபரப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. அந்த இறுதி எபிசோட்டுக்கான திட்டமிடல், சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை குறித்தான தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. இதுமட்டுமில்லாமல், இறுதி எபிசோட்டில் கமல்ஹாசனே சிறப்பு விருந்தினராக வந்து வெற்றி பெறுபவருக்கு ‘பிக்பாஸ் அல்டிமேட்’ கோப்பையும் பரிசுத்தொகையும் கொடுக்க இருக்கிறார்.

பரிசுத்தொகையாக இருபது லட்சம் கொடுக்க இருக்கிறார்கள். தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் தாமரை, நிரூப், ஜூலி, பாலா, சுருதி, ரம்யா, அபிராமி ஆகிய ஏழு பேர் இறுதி கட்டத்துக்கு போட்டியிடுகிறார்கள். மேலும் இறுதி போட்டியில் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ்ஸில் இடம் பெறுவார்கள். அதனால், இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்கள் இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share