Uபொன்னியின் செல்வனின் இவர் யார்?

Published On:

| By Balaji



மிகப்பெரிய வில்லன் ரோல்களில் நடிக்கவில்லை என்றாலும், ‘என்ன இந்த கேரக்டர் ரொம்ப டார்ச்சர் பண்ணுதே’ என்று வெறுக்கும் அளவுக்கு கொடுக்கக்கூடிய நெகடிவ் கேரக்டர்களை செய்யக்கூடியவர் ரியாஸ் கான். தமிழ் சினிமாவின் பெருமையாக ரசிகர்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் கதையைப் பொறுத்தவரையில், ‘இத்தனை கேரக்டர்களை வைத்துக்கொண்டு மணிரத்னம் எப்படி திரைக்கதையை பின்னப்போகிறார்?’ என்ற கேள்வி ஏற்கனவே ஒலிக்கத் தொடங்கிவிட்டது. சொல்லப்போனால், தமிழ் சினிமாவில் இருக்கும் அத்தனை பேருக்கும் கொடுக்கக்கூடிய அளவுக்கு அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் இடம் இருக்கிறது. ஆனால், மணிரத்னம் எந்தப் பகுதியை எடுத்திருக்கிறார் என்பது தெரியவில்லை என்பதால், ஒவ்வொரு நடிகர்களை சேர்க்கும்போதும் மக்களின் எதிர்பார்ப்பு கூடுகிறது.

ரியாஸ் கான் வயதானாலும் உடலமைப்பை பராமரிப்பதிலும், அவரது தோற்றத்தை இளமையாக வைத்திருப்பதிலும் ஒவ்வொரு தினமும் மெனக்கெடுபவர். ஹீரோக்கள் சிக்ஸ் பேக்குடன் தயாராவதற்கு முன்பே, சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு ஆணழகனாய் தமிழ் சினிமாவை சுற்றி வந்த ரியாஸ் கானுக்கு பொன்னியின் செல்வன் கதையின் எந்த கேரக்டரைக் கொடுப்பார் மணிரத்னம்?

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share