எண்ணூர் ஆலையில் அமோனியா கசிவு: பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதி!

Published On:

| By Selvam

ennore coromandel ammonia leak

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட்டதால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல உபாதைகளால் பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு கப்பல்களில் இருந்து தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு வருவதற்காக கடலுக்கடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில், நேற்று(டிசம்பர் 26) இரவு குழாயில் ஏற்பட்ட அமோனியா கசிவு காரணமாக சின்னக்குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், இருமல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கிருந்த மக்கள் உடனடியாக வெளியேறினர். மூச்சுத்திணறல் காரணமாக 30-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில், எண்ணூரில் கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது.

அதாவது, ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 இருக்க வேண்டிய அமோனியா 2090 microgram/m3 இருந்ததாகவும், கடலில் 5 mg/L இருக்க வேண்டிய அமோனியா 49 mg/L இருந்ததுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே இனி குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் நாளை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: கேரள முதல்வர் பங்கேற்கிறார்!

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share