பொறியியல் மாணவர் சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Published On:

| By Selvam

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று (மே 5) முதல் ஜூன் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று (மே 5) முதல் ஜூன் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 40-க்கும் அதிகமான இலவச சேவை மையங்கள் இதற்காக அமைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ராஜ்

தி கேரளா ஸ்டோரி: பதட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள்… டிஜிபி உத்தரவு!

ADVERTISEMENT

அரசு பேருந்து – ஆட்டோ மோதல் : ஒரே குடும்பத்தினர் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share