திடீரென இறங்கிய அமலாக்கத் துறை : எங்கெங்கு ரெய்டு?

Published On:

| By Kavi

  Enforcement directorate raid

தமிழகத்தில் அமலாக்கத் துறை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.  Enforcement directorate raid

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். 

ADVERTISEMENT

அவரது ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கோவை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, செந்தில் பாலாஜியின் பெயரை குறிப்பிடாமல் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். 

ADVERTISEMENT

இந்தநிலையில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. 

கரூர்   Enforcement directorate raid

கரூரில் அரசு ஒப்பந்ததாரர் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT

அரசு ஒப்பந்ததாரர் எம்.சி‌.சங்கர் ஆனந்த் வீடு, கொங்கு மெஸ் உரிமையாளர் மணி (எ) சுப்பிரமணி வீடு, சக்தி மெஸ் கார்த்தி ஆகியோரது வீட்டிலும், 

சென்னை   Enforcement directorate raid

சென்னை  எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது.

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.  பாண்டி பஜார், திலக் தெருவில் உள்ள ACCORD DISTILLERS & BREWERS PRIVATE LIMITED நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் எஸ்டிபிஐ தேசியத் தலைவர் ஃபைசி நேற்று கைதான நிலையில், சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, கொல்கத்தா, தானே உள்ளிட்ட 12 இடங்களில் எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்களிலும் ஈடி சோதனை நடந்து வருகிறது. . Enforcement directorate raid

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share