டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை இன்று (மார்ச் 21) கைது செய்தது.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய், சிங், பிஆர்எஸ் மூத்த தலைவரும் கேசிஆர் மகளுமான கவிதா உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் ஆஜராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்காக ஆஜராகவில்லை.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலின் போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Am waiting : அண்ணாமலையை வரவேற்ற அதிமுக கோவை வேட்பாளர்!
தென் சென்னை தமிழிசை, கோவை அண்ணாமலை: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!