அமலாக்கத் துறை சம்மன் : கெஜ்ரிவால் புறக்கணிப்பு!

Published On:

| By Kavi

Enforcement Department summons Kejriwal ignored

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத் துறை முன்பு ஆஜராகவில்லை. அமலாக்கத் துறை தனக்கு அனுப்பிய சம்மனைத் திரும்பப் பெறக் கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் இரு முக்கிய தலைவர்களான மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் மணீஷ் சிசோடியா பலமுறை ஜாமீன் கேட்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை கடந்த அக்டோபர் 30ஆம் தேதி சம்மன் அனுப்பியது. அதில், நவம்பர் 2ஆம் தேதி விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தது.

ஆனால் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதுதொடர்பாக அமலாக்கத் துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்மன் அரசியல் உள் நோக்கம் கொண்டது, சட்டவிரோதமானது. பாஜக உத்தரவின் பேரில் இந்த சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக அவர் மத்தியப் பிரதேசம் செல்ல இருக்கும் நிலையில், அவருக்குப் புதிதாக சம்மன் அனுப்பவும் அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா, “கெஜ்ரிவால் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. காங்கிரஸ் கூட ஆம் ஆத்மி அரசை ஊழல் அரசு என்று குற்றம்சாட்டியிருக்கிறது. அதனால், அவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு : விரைவில் குறுஞ்செய்தி!

ODI World Cup 2023: அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா? மற்ற அணிகளுக்கான வாய்ப்பு என்ன?

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

24 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share