ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் பறிமுதல் செய்தது என்ன?: ED விளக்கம்!

Published On:

| By Kavi

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து ஜாபர் சாதிக் தயாரிப்பில் படம் இயக்கிய இயக்குநர் அமீரிடமும் என்.சி.பி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஜாபர் சாதிக், அமீர் மற்றும் இந்த வழக்கில் கைதானவர்கள் அளித்த தகவலின்படி அமலாக்கத்துறையினரும் இந்த வழக்கைக் கையில் எடுத்தனர்.

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர்.

இந்த ரெய்டு தொடர்பாக அமலாக்கத் துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டம் 2002ன் கீழ் சென்னை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

ஜாபர் சாதிக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடுகள், வணிக வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

உதயநிதி வீட்டிற்கு எதிரே…பாஜக வேட்பாளர்களுக்குப் போன 65 கோடி…சிக்கிய சிசிடிவி காட்சிகள்…சிக்குகிறாரா கேசவ விநாயகம்?

“தேர்தலுக்கு பிறகு டிடிவி தலைமையில் அதிமுக”: அண்ணாமலை கேரண்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share