மணிப்பூரில் முதல்வர் யும்நம் கேம்சந்த் சிங் தலைமையிலான புதிய அரசில் குக்கி இனத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இணைந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுக்களிடையே மோதல்கள் நீடித்து வருகின்றன. இந்த மோதல்களைத் தொடர்ந்து குக்கி இனக் குழுவினர் தங்களுக்கு தனி நிர்வாக கவுன்சில் அமைக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
இந்நிலையில் யும்நம் கேம்சந்த் சிங் தலைமையில் மணிப்பூரில் புதிய அரசு அமைந்துள்ளது. இந்த அரசில் குக்கி இனத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென், துணை முதல்வராக பதவியேற்றார். இதற்கு குக்கி இனக்குழுவைச் சேர்ந்த அமைப்புகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மணிப்பூரின் சூரத்சந்த்பூரில் முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிய அரசில் இணைந்துள்ள குக்கி எம்.எல்.ஏக்களை “சமூகப் புறக்கணிப்பு” செய்ய வேண்டும் என அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் பதற்றம் நீடித்து வருகிறது.
