அதி பயங்கர நில நடுக்கம்… நெஞ்சம் பதறும் காட்சிகள்… தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனம்!

Published On:

| By christopher

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அங்கு பல கட்டிடங்கள் இடிந்து உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. Emergency Declared After Magnitude 7.7 quake

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இந்திய நேரப்படி சுமார் இன்று (மார்ச் 28) முற்பகல் 11.50 மணியளவில் முதல் பூகம்பம் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அஞ்சி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரில் உள்நாட்டுப் போரால் பேரழிவிற்கு உள்ளான சாகிங் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் உள்ளது. இதனால் அந்த பகுதியில் தான் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த பூகம்பம் மியான்மாரை மட்டுமின்றி அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

அங்குள்ள பல வானுயர்ந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெஞ்சத்தை உறைய வைத்துள்ளன.

மேலும் பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து மீட்புப் பணிகளைத் துரிதமாகச் செய்யும் வகையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு மீட்புப் படையினர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share