Ashok Selvan: ரொமான்ஸ் பாதைக்கு திரும்பிய அசோக் செல்வன்

Published On:

| By Minn Login2

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன்-அவந்திகா மிஸ்ரா இணைந்து நடித்துள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இப்படம் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள்,  அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, ரொமான்ஸ் + காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதில் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ராவுடன் இணைந்து ஊர்வசி, அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தினை டீ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

விரைவில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– ராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஷ்வகுருவா? மவுனகுருவா? : மோடியை சாடிய ஸ்டாலின்

Rohit Sharma: கேப்டன் ‘பதவியில்’ இருந்து நீக்கிட… உண்மையான காரணம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share