அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு : யூனிட்டுக்கு எவ்வளவு தெரியுமா?

Published On:

| By christopher

Electricity tariff hike came into effect from july 1

மின் கட்டணத்தை 4.83% உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று (ஜூலை 15) அறிவித்துள்ளது. மேலும் இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி வீடுகளுக்கான கட்டண உயர்வு பின்வருமாறு, (ஒரு யூனிட்டுக்கு)

“0 முதல் 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ரூ.4.60ல் இருந்து 4.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

401 முதல் 500 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.6.15ல் இருந்து ரூ.6.45ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.9.20ல் இருந்து ரூ.9.65ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.10.20ல் இருந்து ரூ.10.70ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

1000 யூனிட்டுக்கு மேல் யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.11.25ல் இருந்து ரூ.11.80 உயர்த்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 9.35ல் இருந்து ரூ.9.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில்வே, ராணுவ வீரர் குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

50 யூனிட்டுக்கு மேல் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ. 9.70ல் இருந்து ரூ.10.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குடிசை, குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.95 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.7.65ல் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

9 நாட்களுக்கு அந்தியோதியா விரைவு ரயில் ரத்து : பயணிகள் அதிருப்தி!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share