மின்சார இணைப்பு பெயர் மாற்றம்: சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?

Published On:

| By Selvam

electricity connection change special camp

வீடுகளில் மின்சார இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இன்று (ஜூலை 24) முதல் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் பெயர் மாற்றம் செய்ய சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விவரங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

முன்னோர் இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்ய சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

ADVERTISEMENT

ஆதார் அட்டை அல்லது நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது உரிமை ஆவணத்தின் நகல்.

நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் நகல்.

ADVERTISEMENT

செட்டிமென்ட் பத்திரம் அல்லது பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

ADVERTISEMENT

நலவாழ்வு சங்கத்தின் பேரில் பதிவு சான்றிதழ், அல்லது வளாகம், அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற விண்ணப்பத்தில் கையொப்பமிட்ட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம்.

பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் குடியிருப்புகள் அல்லது குடியிருப்பு வளாகங்கள் குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய:

ஆதார் அட்டை, நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது விற்பனை பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம், பரிசு பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை அல்லது நீதிமன்ற உத்தரவு.

நகராட்சி மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம், பரிசு பத்திரம், செட்டிமென்ட் பத்திரம்.

செல்வம்

‘எக்ஸ்’ ஆக மாறும் ட்விட்டர்: எலான் மஸ்க் அதிரடி!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்ப பதிவு முகாம் துவக்கம்!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share