சிறு, குறு நிறுவனங்கள்: மின் கட்டணத்தை குறைத்த தமிழக அரசு!

Published On:

| By Minnambalam

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு இன்று (நவம்பர் 9) உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு, சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதுடன், அதிமுக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை வைத்தனர்.

ADVERTISEMENT

அவர்களது கோரிக்கையை ஏற்று, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை 10% குறைத்து தமிழ்நாடு அரசு இன்று (நவம்பர் 9) உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் மின் கட்டண ஆணை எண்.7/22, 9-9-2022இன்படி, நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்கும்படி பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு (Low Tension III-B) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

ADVERTISEMENT

இவ்வாறு மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

இந்திதான் படிக்க வேண்டுமா? கபில் சிபல்

ஓய்வுபெற்ற டிஜிபி ஜாஃபர் சேட் மனைவி சொத்துக்கள் முடக்கம்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share