மின்வேலிகள்: முன் அனுமதி அவசியம் – அரசு அதிரடி!

Published On:

| By Minnambalam

வனவிலங்குகளைப் பாதுகாப்பதில், தமிழ்நாடு அரசு அதீத ஈடுபாடு காட்டி வருகிறது. இந்த நிலையில், உயர் மின்னழுத்த மின்வேலிகளால், மின் விபத்து ஏற்பட்டு, வன விலங்குகள் மற்றும் யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

இந்த நிலையில், வனவிலங்குகளை மின் விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கு மின்வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் அறிவிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதன்படி சூரியசக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள், தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காடுகளிலிருந்து 5  கிலோமீட்டர்  தொலைவில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மின் வேலிகளை அமைக்கும் வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவன மின் வேலிகளும், இவ்விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள BIS தர நிலைகளான BIS-302-2-76 (இந்தியா) விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கை செய்யப்பட்ட, காப்புக்காட்டின் வனப் பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் ஏற்கெனவே மின்வேலிகளை அமைத்திருப்பவர்கள், தங்கள் வேலிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கால்நடைப் பூங்காவில் தோல் தொழிற்சாலை: விவசாயிகள் எதிர்ப்பு!

கிச்சன் கீர்த்தனா: தக்காளி அடை!

டிஜிட்டல் திண்ணை:  குறிஞ்சி முதல் கோட்டை வரை- உதயநிதி கையில்  போலீஸ் ஹிட் லிஸ்ட்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share