தேர்தல் விதிமீறல் வழக்கில் இருந்து அமைச்சர் எ.வ.வேலு விடுவிக்கப்பட்டுள்ளார். Election violation case
2011 சட்டப் பேரவைத் தேர்தலின்போது, செய்யாறு பகுதியில் நேரம் கடந்து பொதுக்கூட்டத்தை நடத்தி வாக்கு சேகரித்ததாக தற்போதைய பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக எ.வ.வேலு மீது வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கு திருவண்ணாமலை நடுவர் நீதிமன்றம் 1ல் நடந்து வந்தது. இன்று (ஜூன் 10) அமைச்சர் எ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, அரசு தரப்பில் முறையாக சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் எ.வ.வேலுவை விடுவித்து நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய விஷ்ணுபிரசாத் எம்.பி உள்ளிட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். Election violation case