அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து ரொக்கப் பணம் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். பயணிகளின் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சூட்கேஸ், டிராலி பேக், கைப்பைகள் அனைத்தும் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பார்சல்கள் பதிவு செய்யும்போது அதில் உள்ள விவரங்கள் கேட்கப்பட்டு புக்கிங் செய்யப்படுகிறது. பணம், பரிசு பொருட்கள் போன்றவை கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு விரைவு பேருந்துகளில் எடுத்து செல்லப்படும் பொருட்கள் கண்காணிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: நார்த்தங்காய் ஊறுகாய்
ஆரம்பமே இப்படியா? – அப்டேட் குமாரு
Am waiting : அண்ணாமலையை வரவேற்ற அதிமுக கோவை வேட்பாளர்!
CSK vs RCB: முதல் போட்டியில் ‘களமிறங்கும்’ அந்த 11 வீரர்கள் யார்?