வைஃபை ஆன் செய்ததும், ”எல்லாமே கண்ணாமூச்சி ஆட்டமா இருந்தா எப்படி”என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னப்பா.. கண்ணாமூச்சி ஆட்டம்?
தேர்தல் களநிலவரத்தைத்தான் சொல்றேன்.. சிஎம் ஸ்டாலின் போன வியாழக்கிழமை முக்கியமான மீட்டிங் ஒன்னை நடத்தியிருக்காரு.. அதை பத்திதான் ஒரே பேச்சு..
இந்த மீட்டிங் பத்தி அறிவாலய வட்டாரங்களில் பேசுனப்ப, “சிஎம் வீட்டுக்கு திமுகவின் மண்டல பொறுப்பாளர்கள் எல்லோரையும் வரவழைச்சு மீட்டிங் நடத்தினாரு.. கேஎன் நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், எவ வேலு, கனிமொழி, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, செந்தில் பாலாஜின்னு எல்லோரும் கலந்துகிட்டாங்க..
இந்த மீட்டிங்குல திமுகவோட வியூக வகுப்பு டீமும் கலந்துகிட்டது.. ராபின்சன், ரிஷி எல்லோரும் இருந்தாங்க.. அப்போ, PEN டீம் டீட்டெய்லா தொகுதி வாரியாக ஒரு ரிப்போர்ட்டை கொடுத்தது..
தமிழகம் முழுவதும் எடுத்த இந்த ரிப்போர்ட்டுல விஜய்யின் தவெக 20% ஓட்டுகளை நெருங்குதுன்னு சொல்லி இருக்காங்க..
அத்தோட நிற்காமல், திமுகவுல உட்கட்சி மோதல் ரொம்பவே அதிகமாக இருக்கு.. தலைமை நிறுத்துற வேட்பாளரை தோற்கடிக்கனும்னு இன்னொரு குரூப் இப்பவே ரெடியாகிட்டு இருக்கு.. குறிப்பாக சென்னை மண்டலத்துல நிலைமை ரொம்பவே மோசமா இருக்குன்னு அடுத்தடுத்து எல்லாத்தையும் போட்டு உடைச்சிருச்சு PEN டீம்.
இத்தனையையும் பொறுமையாக கேட்ட சிஎம் ஸ்டாலின் செம்ம அப்செட் ஆகிட்டாரு..
எந்த கட்சியோட ஓட்டு விஜய் கட்சிக்கு போகுதுன்னும் ஒரு டிஸ்கஷனும் நடந்துச்சு.. எல்லா கட்சியோட ஓட்டும்தான் விஜய் கட்சிக்கு டைவர்ட் ஆகுதுன்னும் சொல்லி இருக்காங்க..
இந்த பொலிட்டிக்கல் மீட்டிங்கோட, தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனையும் சிஎம் அழைச்சு ஆலோசனை நடத்துனாரு
அப்ப, பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு எவ்வளவு கொடுக்கிறதுன்னு ஆலோசிச்சாங்க.. அமைச்சர் கே.என். நேரு போன்றவங்க, ஒரு கார்டுக்கு ரு5,000 கொடுக்கலாம்னு சொன்னாங்க…
ஆனா நிதித்துறை செயலாளர் உதயசந்திரனோ, இப்ப இருக்குற நிதி நிலைமையில ஒரு கார்டுக்கு ரூ2,000தான் தர முடியும்.. அதுக்கு மேல கொடுக்கிறதுக்கு ஃபண்ட் இல்லையேன்னு சொல்லி இருக்காரு..
இந்த டிஸ்கஷன் முடிவுல, ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ3,000 கொடுக்கனும்.. அதுக்கான ஃபண்ட் ரெடி பண்ணுங்கன்னு சிஎம் சொல்லிட்டாரு..
அதே மாதிரி மகளிர் உரிமைத் தொகையில பெண்டிங் இருக்கிற 20 லட்சம் பேருக்கு மாதம் ரூ1,000 விடுவிக்கனும்னு சொல்லப்பட்டிருக்கு..” என்கின்றனர்.
ஓஹோ.. திமுக தரப்புல வேற என்னய்யா வியூகம்?
இருக்குய்யா.. பொதுவாக தேர்தல் அறிக்கைன்னு பெருசா புத்தகம் போட்டு துண்டு நோட்டீஸ் அடிச்சு மீட்டிங்குல பேசுறதுதான் வழக்கம்..
இந்த முறை திமுக மாற்றி யோசிச்சு அட்வான்ஸாக, டெக்னிக்கலாகவே தேர்தல் வாக்குறுதியை கொடுக்க போகுதாம்..
இதை பற்றி கோட்டை வட்டாரங்களில் அதிகாரிகள்கிட்ட பேசுனப்ப “அரசு பணியாளர்கள் டீம் ஒன்னு வீடு வீடா போக இருக்கு.. அப்படி போகிற இந்த டீம் மகளிர் உரிமைத் தொகை வந்திருக்கா? வீட்டுல படிக்குற பிள்ளைகளுக்கு உதவித் தொகை வந்திருக்கான்னு? எல்லாத்தையும் விசாரிச்சுட்டு ஒரு ஃபார்ம் கொடுக்க போறாங்க.. அதுல, உங்க வீட்டுக்கு இன்னும் என்ன தேவை? வீடு.. பட்டா, மின்சார வசதின்னு என்ன தேவையோ அதை எழுதி தாங்கன்னு சொல்ல போறாங்க..
அப்படி எழுதி கொடுக்கிறவங்களுக்கு QR குறியீடு இருக்கிற ஸ்மார்ட் கார்டு மாதிரி ஒன்னு கொடுப்பாங்க.. 2026 தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஆட்சி அமையும் போது உங்க அப்ளிகேஷன் என்ன ஸ்டேஜில் இருக்குன்னு அந்த கார்டு மூலமாக தெரிஞ்சுக்கலாம்னு சொல்ல போறாங்க.. SIR முடிஞ்ச உடனேயே இந்த வேலையை ஜரூராக தொடங்க போறாங்க”என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
