மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக குமரி மாவட்டம் விளவங்கோட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி கடந்த மாதம், டெல்லி சென்று பாஜகவில் இணைந்தார். விஜயதரணி பாஜகவில் இணைந்ததை குமரி மாவட்ட பாஜகவினரே பெரிய அளவில் விரும்பவில்லை. இதைத் தெரிந்துகொண்ட விஜயதரணி இன்று வரை தனது சொந்த மாவட்டமான குமரி மாவட்டத்துக்கு வருகை தரவில்லை.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் தனக்கு சீட் வேண்டாம் என்றும் தென் சென்னை தொகுதியை தனக்கு வழங்குமாறும், தன்னை பாஜகவில் சேர்த்துவிட்ட டெல்லி பிரமுகர்கள் மூலம் முயற்சித்து வருகிறார் விஜயதரணி. தென் சென்னை தொகுதியின் திமுக எம்பியாக தற்போது தமிழச்சி தங்கபாண்டியன் இருக்கிறார். அவரே மீண்டும் போட்டியிடுகிறார். பெண்ணுக்கு எதிராக பெண்ணான தன்னை நிறுத்துமாறு விஜயதரணி கோரிக்கை வைத்து வருகிறார்.
ஆனால் பாஜகவில், ஏற்கனவே தென் சென்னை தொகுதியை குறி வைத்து மாநில செயலாளரும், ஆர்.எஸ்.எஸ். அடிப்படையில் இருந்து வந்தவருமான எஸ்.ஜி.சூர்யா சில மாதங்களாகவே தீவிர பணியாற்றி வருகிறார். நிர்மலா சீதாராமனின் தீவிர அபிமானியான எஸ்.ஜி.சூர்யாவுக்கு தென் சென்னை சீட் நிச்சயமாகிவிட்ட நிலையில் விஜயதரணியின் இந்த மூவ் அமைந்திருக்கிறது. விஜயதரணிக்கு குமரி பாஜகவினர் போலவே, தென் சென்னை பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
–வேந்தன்
எலக்ஷன் ஃபிளாஷ்: மோடி மேடையில் அதிமுகவை விமர்சிக்க தடை!
புதிய வரலாறு: இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள்… ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!