சட்டமன்றம் பிப்ரவரி 22 இன்றோடு முடியும் நிலையில்…பத்து முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் புறக்கணித்து வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர், விஏஓ, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் தமிழகம் முழுதும் பங்கேற்கிறார்கள்.
திமுக தேர்தல் அறிக்கையின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்திருந்தது.
கடந்தவாரம் உண்ணாவிரதம் இருந்த இவர்கள், இன்று பிப்ரவரி 22 தேர்தல் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
அரசு தங்களை அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 27ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பல புதிய திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், அவற்றை செயல்படுத்த போதுமான ஊழியர்கள் இல்லை என்று போராடும் வருவாய் துறை அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
சீதா.. அக்பர்.. : அரசு வழக்கறிஞரிடம் சீறிய நீதிபதி… அதிரடி உத்தரவு!
அடுத்தடுத்து ரெய்டு..30 நிறுவனங்கள் பாஜகவில் கொட்டிய கோடிகள் – பாகம் 1