நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது நிர்வாகிகளுக்கு புதிய பட்டப் பெயர்களை சூட்டியுள்ளார்.
பிப்ரவரி 2 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், இசை மதிவாணன் ஆகியோர் வீடுகளில் மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. சோதனையிட்டது. இதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ.,வின் சம்மன் அடிப்படையில் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன் ஆகியோர் பிப்ரவரி 7 ஆம் தேதி என்.ஐ.ஏ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
விசாரணை முடிந்ததும் கட்சியின் தலைவர், விசாரணை எப்படி இருந்தது என்று அவர்களிடம் விசாரித்துள்ளார்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘மிசா, தடா, பொடா சட்டங்களில் கைதானவர்கள், விசாரணைக்கு உள்ளானவர்கள் தங்களது பெயர்களுக்கு முன் தடா, பொடா என்று போட்டுக் கொண்டுள்ளனர். மிசா கணேசன், தடா பெரியசாமி, அன்பு மாமா பொடா சாகுல் ஹமீது, பொடா பூமிநாதன் என்று பல பேர் தமிழ்நாட்டு அரசியலில் சட்டத்தின் அடைமொழியோடு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் பட்ட சித்திரவதைகளை தங்கள் அரசியல் வாழ்க்கைக்கு உரமாக ஆக்கிக் கொண்டார்கள். அதுபோல இந்த என்.ஐ.ஏ. அமைப்பின் சோதனையும், விசாரணையும் நமக்கு அரசியல் ரீதியாக பயன்பட வேண்டும்.
அதனால் என்.ஐ.ஏ. ஏஜென்சியால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நமது தம்பிகளின் பெயருக்கு முன் இனி என்.ஐ.ஏ. என்று சேர்த்தே அழைக்க வேண்டும், சுவரொட்டிகளில் அவ்வாறே குறிப்பிட வேண்டும். என்.ஐ.ஏ. விசாரணை என்பது நாம் தமிழர் கட்சிக்கான அரசியல் உரமாக பயன்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார் சீமான்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நரசிம்ம ராவ், சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதன் : ஒரே நாளில் 3 பாரத ரத்னா!
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் பள்ளி மேலாண்மைக் குழு தேர்தல்: அச்சாணியை கவனிக்குமா அரசு?
விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம்… தமிழ்நாட்டிற்கு கிடைத்த கவுரவம்!
Comments are closed.