புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பாஜக, அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தொடர்ச்சியாக இயங்கி வந்தார்.
திமுகவிற்கு எதிராக விமர்சனங்களை செய்து வந்தார். பாஜக கூட்டணியில் தென்காசி தொகுதி தனக்கு கிடைக்கும் என அவர் எதிர்பார்த்து வந்த நிலையில், அத்தொகுதியில் ஸ்ரீதர் வேம்புவின் ஆதரவாளர் ஒருவர் பாஜக சார்பாக போட்டியிட உள்ளார். இதனால் மனக்கசப்பில் இருந்து வருகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை தனது கூட்டணிக்கு அழைத்துள்ளார். ஆனால் கிருஷ்ணசாமியோ திமுக பக்கம் திரும்பும் முடிவில் இருக்கிறார். திமுக கூட்டணியில் தென்காசி தொகுதியை தனக்கு கேட்டு பேச்சுவார்த்தையை துவங்கியிருக்கிறார்.
இதை அறிந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும் திமுகவோடு பேசுவதற்கு தயாராகி வருகிறார்.
விசிக துணை பொதுச்செயலாளர் ஆனார் ஆதவ் அர்ஜூன்
மாவட்ட செயலாளர்கள் மீதான புகார்கள்: இளைஞரணி நிர்வாகிகளிடம் கேட்கும் உதயநிதி