எலக்‌ஷன் ஃப்ளாஷ் : காங்கிரஸ் கோட்டாவில் கமல்… பஞ்சாப் ஆளுநர் ஆகிறாரா பொன்னார்?

Published On:

| By christopher

Election flash: Is Pon Radhakrishnan becoming the governor of Punjab?

காங்கிரஸ் கோட்டாவில் கமல்

திமுக கூட்டணியில் புதிதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கமல் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. திமுக தரப்பில் காங்கிரசிடம், ‘உங்களுக்கு ஒதுக்கும் இடங்களில் ஒன்றில் கமலுக்கு கொடுங்கள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதனால் காங்கிரசுக்கு முன்பை விட ஒரு சீட் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கமல்ஹாசன் தரப்பில் தென் சென்னை, கோவை தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தென் சென்னை என்பது திமுகவின் பாரம்பரியமான தொகுதி, இங்கே கமல்ஹாசனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று தலைமையிடம் திமுக நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

பஞ்சாப் ஆளுநர் ஆகிறாரா பொன்னார்?

வரும் மக்களவைத் தொகுதியில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட முயற்சி மேற்கொண்டு வந்தார் முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன். ஆனால், ‘நீங்கள் போட்டியிட வேண்டாம்’ என்று பொன்னாருக்கு அறிவுறுத்திய பாஜக தேசிய தலைமை, அவருக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பதவியை கொடுக்கலாமா என்று பரிசீலித்து வருகிறது என்கிறார்கள் பொன்னாரின் வட்டாரத்தில்.

பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் சமீபத்தில் ராஜினாமா செய்தார். ஏற்கனவே தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுக்கு ஆளுநர் வாய்ப்பு வந்தபோதெல்லாம் பொன்னாரின் பெயர் பேசப்பட்டு கடைசி நேரத்தில் மாறிவிடும். இம்முறை அப்படி ஆகாது என்கிறார்கள் குமரி பாஜகவினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மதரஸா இடிப்பு: கலவரத்தில் 6 பேர் சுட்டுக்கொலை… 3வது நாளில் நிலைமை என்ன?

கிச்சன் கீர்த்தனா : இந்தியன் ஸ்டைல் பாஸ்தா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share