தேர்தல் நேரங்களில் திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதற்கு மூன்று டெம்போ ட்ராவலர் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
ஏற்கெனவே அந்த மூன்று வேன்களும் அறிவாலயத்தில் நிற்கும் நிலையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ள கருப்பு நிறத்தில் இரண்டு பென்ஸ் வேன்களை வாங்கி தற்போது அறிவாலயத்தில் நிறுத்தி வைத்துள்ளது திமுக தலைமை.
ஒரு வேன் உதயநிதிக்கும் மற்றொரு வேன் முதல்வர் ஸ்டாலினுக்கும் என்கிறார்கள் அறிவாலயம் நிர்வாகிகள்.
முதல்வர் கான்வாயில் வரும் பாதுகாப்பு வாகனங்களும் கருப்பு. இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லப் போகும் பென்ஸ் வேனும் கருப்பு. ஆக மொத்தம் திராவிட நிறத்தை வெளிப்படுத்துகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி